Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம்பட்டி ரங்கராஜன் மீண்டும் குக் வித் கோமாளி வந்தது இதற்குத்தானா? இவ்வளவு அசிங்கம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் கோபமடைந்த மாதம்பட்டி ரங்கராஜ், கிரிஸில்டா மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளான குரேஷி மற்றும் புகழ், ரங்கராஜை சூசகமாக கலாய்த்துப் பேசிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook With Comali Qureshi Pugazh Mathampatti Rangaraj

குரேஷியின் நக்கல்

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ஒரு பாட்டு டாஸ்க் நடைபெற்றது. அதில், நடிகை பிரியா ராமன், தொகுப்பாளினி போல போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, குரேஷி போன் செய்து, "நான் ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு பொண்ண லவ் பண்ணேன், ஆனா அவ எதுவும் சொல்லல. இப்ப நான் காலேஜ் படிக்கிறேன்னு சொல்றேன்" என்று ஒரு பெண்ணின் காதலைத் தேடி அலைவதைப் போல் பேசுகிறார். அதற்கு பிரியா, "இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி ஒரு பாட்டைச் சொல்றேன், உங்களுக்கு என்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க" என்று கேட்கிறார்.

அதற்கு, குரேஷி தனது நண்பர் ஒருவரைப் பற்றிச் சொல்வது போல, "இந்த பாட்டு எனக்காக இல்ல, என் நண்பன் ஒருத்தன் காதல்ல எக்ஸ்பர்ட், அவருக்காக டூ டுட்டூ டூ டுட்டூ** என்ற பாடலை போடுங்கள்" என்று மாதம்பட்டி ரங்கராஜை சூசகமாக கலாய்க்கிறார்.

கல்யாண ஆர்டர் எல்லாம் இப்போ நமக்குத்தான்

அடுத்ததாக, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்‌ஷன், கேட்டரிங் சர்வீஸ் வைத்திருக்கும் புகழிடம், "கல்யாண ஆர்டர்லாம் எப்படிப் போகுது?" என்று கேட்கிறார். அதற்குப் புகழ், "இப்போ ஆர்டர்லாம் நமக்குதான் வருது. முன்னாடி ஒருத்தர் கிட்ட இருந்தது. இப்போ அது எல்லாம் நமக்குதான் வருது" என்று வெளிப்படையாகவே மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்துத் தள்ளிவிட்டார்.

மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்த நடிகராக மட்டுமல்லாமல், பிரபல சமையல் கலைஞராகவும் வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ், பல முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் வீட்டுத் திருமணங்களுக்குச் சமையல் செய்து கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பெரிய பொறுப்பை வகித்து வரும் அவரை, குரேஷி மற்றும் புகழ் கலாய்த்துப் பேசிய வீடியோ, இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில், "மாதம்பட்டி என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" என்று கூறியிருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகள், அவரைப் பற்றிப் பேசுவது நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்யாமல் என்னை கர்ப்பமாக்கினார்! மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் நீதிமன்றத்தில் புகார்!
மாதம்பட்டி ரங்கராஜன் குடும்ப பிரச்சனை சோசியல் மீடியாவில் பேசப்பட்ட பிறகு அவர் ஒரு வாரம் மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்தார். அதனால் இவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த வாரத்தில் அவர் மீண்டும் வந்திருக்கிறார். இது ஆரம்பத்திலேயே விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் இந்த வாரம் அவரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதற்காக தான் இப்படி ஒரு பிளான் போட்டார்களா? என்று கமெண்ட் வருகிறது. ரங்கராஜனை வைத்து குரோஷி இந்த எபிசோட்டில் அதிகமான முறை கலாய்த்து இருக்கிறார்.

அதிலும் குரோஷிக்கு ஒரு முறை ஹெட் போன் மாட்டப்பட்டு இருந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜன் வந்து குரோஷியை உனக்கு அறிவு இருக்கா? நீ சோறு தானே திங்குற? என்றெல்லாம் பேசி இருந்தார். அவர் பேசிட்டு போன பிறகு அவர் பேசியதை பக்கத்திலிருந்த நந்தகுமார் போட்டுக் கொடுக்க, அதற்கு குரோஷி அவர் என்னை இப்படி பேசி சிரிச்சுட்டு போனார் என்றால் இன்னொரு வீடியோ போட்டு அவரை சிரிக்க விடாம பண்ணிடுறேன் என்று மிரட்டி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, மாதம்பட்டி ரங்கராஜின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், "கலாட்டா" என்ற பெயரில் செய்யப்படும் இதுபோன்ற காமெடி, பார்வையாளர்களின் மத்தியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மேலும் வரவேற்பைக் கூட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+