தந்தையால் பட்ட அவமானமும், அசிங்கமும்.. சாதித்த மதுமிதா! கண்கலங்கி செஃப் தாமு சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் மதுமிதா தான் பிறந்ததும் தன்னுடைய தந்தை இறந்தது குறித்தும், தன்னுடைய தந்தை இறந்ததால் தான் பட்ட அவமானம், கஷ்டங்கள் குறித்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது அவருக்கு செஃப் தாமு ஆறுதல் கூறி இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை மதுமிதாவை பலருக்கும் தெரிந்திருக்கும் இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அது போல சின்ன பாப்பா பெரிய பாப்பா உட்பட பல காமெடியான சீரியல்களிலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் நடிகர் சந்தானத்துடன் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் இடம்பெற்ற "அடை... தேன்அடை" காமெடி இவருடைய நடிப்புக்கு அடையாளமாக இருந்தது.

சந்தானம் திரைப்படம்
அந்த திரைப்படத்திற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தார். ஆனாலும் தொடர்ந்து இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சிறு குழந்தையை கவனித்த படியே சினிமாவிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
பிக் பாஸ் போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவை மொத்த போட்டியாளர்களும் டார்கெட் செய்து அவர் தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு போய் இருந்தார். அப்போது மக்கள் அவருக்கு அதிகமான ஆதரவு கொடுத்தனர். அவர் எப்படியாவது இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது. அதன் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவிக்கு டாடா போட்டு சென்றிருந்த மதுமிதா இப்போது பல வருடங்கள் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

ஃபேமிலி ரவுண்டு
மதுமிதா இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றதும் இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. அவர் வழக்கமாக தன்னுடைய காமெடி நிறைந்த பேச்சுகளால் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்டு நடைபெறுகிறது அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகிறார்கள்.
நடிகை மதுமிதா குடும்பம்
அதுபோல தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது மதுமிதாவிடம் அவருடைய தந்தை புகைப்படம் காட்டப்பட்டது. அதை பார்த்து மதுமிதா என்னுடைய தந்தை நான் ரெண்டு வயசாக இருக்கும்போதே இறந்து போயிட்டாரு. அவர் இறந்ததும் என்னுடைய குடும்பத்தினர் எல்லோருமே என்னை அப்பாவை முழுங்கிட்டு வந்தவ என்று என்னை திட்டி தீர்த்து வந்தனர். இப்ப வரைக்கும் அந்த பழி வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குக் வித் கோமாளி ப்ரோமோ
ஐந்தாவது பெண் குழந்தையாக நான் பிறந்தேன் என்று என்னுடைய அப்பா என்னை அடித்தாராம். ஆனால் இந்த குடும்பத்தில் நான் தான் ஆண் பிள்ளையாக இருக்கிறேன் என்று என்னுடைய அம்மா சொல்லுவாங்க. அது எனக்கு சந்தோஷம்தான் என்று மதுமிதா தன்னுடைய சோகத்தையும் சிரிப்பு கலந்து வெளிப்படுத்த அப்போது செஃப் தாமு நான் உனக்கு அப்பாவா இருக்கிறேன் நீ எந்த இடத்திலும் கவலைப்பட கூடாது என்று ஆறுதல் சொல்லி இருந்தார். ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுமிதாவை பலரும் பாராட்டி அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications