என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க.. மணிமேகலை, பிரியங்கா பிரச்சனைக்கு பூஜா வெளியிட்ட திடீர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகி இருக்கும் நிலையில் அதற்கு காரணம் பிரியங்கா என்று அவர் தெரிவித்ததை தொடர்ந்து இணையத்தில் மணிமேகலை மற்றும் பியர்காவை பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரபலமான பூஜா இந்தப் பிரச்சனைக்கு திடீர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை மணிமேகலை தன்னுடைய instagram பக்கத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போறேன் அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் தொகுப்பாளர் தான். அந்த பெண் தொகுப்பாளர் என்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் எனக்கு தன்மானம் முக்கியம். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்து விட்டேன் என்று பெரிய நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார்.

Television Vijay TV Manimegalai

அதை தொடர்ந்து தன்னுடைய youtube சேனலிலும் அது குறித்த விளக்கத்தை கொடுத்திருந்தார். இதனால் அதிகமான ரசிகர்கள் பிரியங்காவை திட்டி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் மணிமேகலை எடுத்தது அவசரமான முடிவு என்றும் கருத்து கூறி வருகிறார்கள். ஏற்கனவே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் தொகுப்பாளராக வந்திருந்தார். அதுபோல இந்த முறையும் அவர் அவசர முடிவு எடுத்திருக்கிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் மணிமேகலை வேறு சேனல் போவதற்காக இந்த நிகழ்ச்சியை பற்றியும் பிரியங்கா பற்றியும் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லி வருகிறார்கள். மணிமேகலை வெளியிட்ட பதிவுக்கு பிரியங்கா தரப்பில் இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் மணிமேகலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரோஷி, ஃபரீனா ஆசாத் மற்றும் பழைய போட்டியாளரான மோனிஷா, செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை, தொகுப்பாளராக இருக்கும் அனிதா சம்பத் உட்பட பலர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குக் வித் கோமாளி போட்டியாளராக கலந்து கொண்ட பூஜா இந்த பிரச்சனை குறித்து ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே பூஜா நெருக்கமானவர். பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், அப்போது டிஜே பிளாக் மற்றும் பூஜா இடையே காதல் இருப்பது போன்று கடைசி வரை பிரியங்கா கண்டெண்ட் உருவாக்கி இருந்தார்.

Television Vijay TV Manimegalai

அந்த பாசத்தாலோ என்னவோ இப்போது பிரியங்காவிற்கு ஆதரவாக போஸ்ட் போட்டு இருக்கிறார் என்று கலாய்க்கிறார்கள். பூஜா வெளியிட்ட பதிவில், ஒருவரை வெறுக்காமல் இன்னொருவரை ஆதரிப்பது எப்படி என்று மக்களுக்கு தெரியாதா வெட்கப்படாமல் உங்களுக்கு பிடித்த மனிதரை வீழ்த்த பயங்கரமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் உங்களுக்கு பிடித்த நபரே ஆதரிக்கலாம்.

நம் சமூகம் பெண்களை எளிமையாக வீழ்த்துவது முற்றிலும் விரும்புகிறது. ஒரு பொது இடத்தில் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யவதற்கு முன்பு தயவு செய்து கொஞ்சம் இரக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தையும் எவ்வாறு பாதிப்பும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் யாருக்கும் சாட்சியாக வரவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் யாருக்கும் சப்போர்ட் பண்ணுங்க என்று கேட்கவில்லை. ஆனால் உங்களுக்கு தெரிந்தால் அடுத்தவர்களை பற்றி பழி சொல்லி அவர்களை திட்டலாம் இல்லையென்றால் அதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் யாரை பற்றியும் நேரில் பார்த்தது கிடையாது. தொலைக்காட்சியில் ஒரு சில மணி நேரங்கள் பார்ப்பதை வைத்து நீங்கள் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று யாரையும் புரிந்து கொள்ள முடியாது.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனத்துடன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எல்லோரும் தெரிந்து இருக்க விரும்புகிறேன். ஒரு சூழ்நிலையில் உண்மை தன்மையை அறியாமல் ஒரு நபரை அவமானப்படுத்துவது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் எண்ணங்களை பாதிக்க சமூக ஊடகங்களுக்கு அதிக சக்தி உள்ளது ஆனால் உண்மையான விஷயம் என்ன என்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்.

Television Vijay TV Manimegalai

நீங்கள் அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். தயவு செய்து வெறுப்பை நிறுத்துங்கள். இந்த கொடூரமான சூழ்நிலையில் நீங்களும் நானும் ஒருநாள் கூட நீடிக்க மாட்டோம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் போராடுவதற்கு நிறைய வலிமை தேவைப்படுகிறது. அதில் மற்றொருவரின் சோகத்திற்கு காரணமாக இருக்காதீர்கள். யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கும் வாய்ப்பாக இதை பார்க்க வேண்டாம்.

vijay tv manimegalai

தயவு செய்து ஒருவரை காயப்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுக்காதீர்கள். உங்களால் அன்பை பரப்ப முடியாது என்றால் விட்டால் குறைந்த பட்சம் எல்லா இடங்களிலும் வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள் என்று அந்த பதிவில் பூஜா வேண்டுகோள் வைத்திருக்கும் நிலையில் பூஜா பிரியங்காவிற்கு ஆதரவாக கமெண்ட் போட்டு விடுகிறார்.

ஆனால் மணிமேகலை பிரச்சனைக்கு இன்னும் பிரியங்கா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் உண்மையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது சேனல் தரப்பில் இருந்தோ அல்லது பிரியங்கா தரப்பில் இருந்தோ விளக்கம் கொடுக்கும்போது தான் தெரிய வரும். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சின்ன பிரச்சனை நடந்தால் கூட அதை ப்ரோமோவாக வெளியிடும் விஜய் டிவி இப்போது இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தும் அது பற்றி எந்த ப்ரோமோவும் வெளியிடாமல் இருப்பது அதிசயமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+