விஜய் டிவியில் முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. காரணமே இதுதானா? வெளியான தகவல்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வர இருப்பதாகவும் இனி அந்த நிகழ்ச்சிக்கு பதிலாக வேற நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பேமஸ் ஆன விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதுவும் இளைஞர்களை கவரும் வகையிலேயே இந்த நிகழ்ச்சியை சேனலில் பல நிகழ்ச்சிகள் இருக்கிறது. பல மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சிகளின் காப்பியாக கூட விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் உருவாகிறது. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரையும் ரசிக்கும் வகையில் கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

இதில் பலருக்கும் பரீட்சயமான பிரபலங்கள் குக்குகள் ஒரு பக்கமும், அவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று தொந்தரவு செய்யும் கோமாளிகளும் செய்யும் சமையல் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதனாலயே இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் நான்கு சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக இருந்தனர்.
அதுபோல இந்த நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடந்த ஐந்தாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே மீடியா மேஷன்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
அதற்கு பிறகு புதிய டீம்முடன் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கியது. அதில் இருந்து வெங்கடேஷ் பட் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக கலந்து கொண்டார். அதுபோல அந்த சீசனில் டைட்டிலை பிரியங்கா வெற்றி பெற்று இருந்தார். ஆனால் ஐந்தாவது சீசனில் பெரும் பரபரப்பும் சர்ச்சைகளும் நிறைந்து இருந்தது.
ஆரம்பத்திலேயே நாஞ்சில் விஜயன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மணிமேகலை ஒரு போஸ்ட் போட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்னை வேலை செய்யவிடாமல் தொந்தரவு செய்கிறார் என்று பிரியங்காவின் பெயரை சொல்லாமலே ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.
இதனால் பிரியங்காவிற்கு எதிராக பலர் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்தனர். ஆனால் விஜய் டிவி தரப்பினர் பலர் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தனர். அதுபோல விஜய் டிவியில் இருந்து விலகிய மீடியா மேஷன்ஸ் நிறுவனம் வெங்கடேஷ் பட் உடன் சன் டிவியில் டாப் 10 என்ற நிகழ்ச்சியை நடத்தி வெற்றி கண்டது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீடியா மேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கி இருந்த நிலையில் அதுவரைக்கும் இருந்த டிஆர்பியும் கடந்த சீசனில் குறைந்திருந்தது. இதுபோல விஜய் டிவியில் இருந்து மீடியா மெஷன்ஸ் விலகி விட்டதால் அந்த நிறுவனம் உருவாக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு புது நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications