பிக் பாஸ் போல CWC-யில் குறும்படம்? மணிமேகலை, பிரியங்கா பிரச்சனையை வைத்து விஜய் டிவி செம பிளான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் இருந்து விலகிய மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் வெளியிடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிடப்படுமா? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை விலகியது குறித்த விவாதம் அதிகமாக இருக்கிறது. மணிமேகலை தனக்கு தன்மானம் முக்கியம். தன்மானத்திற்கு முன்பு பணம், காசு, பதவி எதுவும் தேவையில்லை. நான் என்னுடைய வேலையை 100% உண்மையாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுக்கிறார்கள். அதனால் நான் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதோடு இந்த சீசனில் குக்காக வந்த தொகுப்பாளர் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு எல்லோரும் அவருக்கு கீழே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று பல விஷயங்களை பற்றி கடந்த சனிக்கிழமை போஸ்ட் ஒன்று வெளியிட்டார். மணிமேகலை வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் தொடங்கிய ஆரம்பத்திலிருந்து உள்ளே புகைச்சல் இருந்து கொண்டே இருப்பது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒவ்வொரு இடத்திலும் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் வருவது போன்று இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் அது கண்டண்டு என்பது போல போய்விட்டாலும் மணிமேகலையின் முகம் பிரியங்கா பேசும்போது மாறுவதையும் பார்க்க முடியும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆண் கோமாளிகளுக்கு இணையாக ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமாக வேஷம் போட்டு மணிமேகலை அசத்தியிருக்கிறார்.
அதனாலேயே அவர் பலருடைய பேவரைட் ஆகவும் மாறி இருந்தார். ஆரம்பத்தில் சன் டிவியில் தன்னுடைய தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி இருந்தாலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் மணிமேகலைக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. பல வருடங்களாகவே பிரியங்கா மற்றும் மணிமேகலை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இடையே வெடித்த பிரச்சனை இப்போது இணையத்தில் கருத்து மோதல்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கத்தில் மணிமேகலைக்கு ஆதரவாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனையிலும் விஜய் டிவி அமைதியாக இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
இரண்டு தொகுப்பாளர்களுக்குள் தனிப்பட்ட பிரச்சனைகள் என்றால் பரவாயில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு ஒரு சேனலில் உண்மையாக வேலை பார்க்க முடியாமல் தடுக்கிறார்கள் என்ற ஒரு பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அப்போதும் கூட விஜய் டிவியில் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை வெளியே இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள்.
அதிலும் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே பிரச்சனை செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான நிகழ்ச்சிக்கான சூட்டிங் நடைபெறும் போது ஏற்பட்டிருக்கிறது. சூட்டிங் முடிந்து இரண்டு வாரம் ஆகிவிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி தான் மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று அறிவித்திருக்கிறார்.
அதாவது கடந்த வாரத்தில் வாழை திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்யா துரைசாமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். அப்போது தான் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது திவ்யா துரைசாமி எலிமினேஷன் என்று சொல்லப்பட்டதும் திவ்யா துரைசாமி அந்த நிகழ்ச்சியில் இருந்து எல்லோர் பற்றியும் பேசி இருக்கிறார். அப்போது பிரியங்கா பற்றி அவர் பேசியதும், பிரியங்கா திவ்யா துரைசாமி பற்றி பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாராம்.
ஆனால் அப்போது மணிமேகலை இந்த விஷயங்கள் எல்லாம் நாங்கள் பேச வேண்டும். தொகுப்பாளர் பேச வேண்டிய விஷயங்களையும் நீங்களே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு போட்டியாளராக இங்கே வந்திருக்கிறீர்கள் அதை மறந்து போய் தொகுப்பாளர் பேச வேண்டிய விஷயத்தை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எல்லோருக்கும் முன்பும் கோபமாக சொல்ல அதுவே பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே வாக்குவாதமாக ஏற்பட்டிருக்கிறது.
உடனே பிரியங்கா கோபப்பட்டு கேரவன் சென்று அங்கு அழுது இருக்கிறார். அப்போது நிகழ்ச்சி குழுவினர்கள் எல்லோரும் சமாதானம் செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு அன்றைய எபிசோடு முடிந்தாலும் அடுத்த நாள் சூட்டிங்கில் பிரியங்கா நான் இதில் கலந்து கொள்ள மாட்டேன், எல்லார் முன்பும் மணிமேகலை என்னை பற்றி பேசியது தவறு என அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னதாகவும் அதற்கு சேனல் தரப்பினர் மற்றும் குக் வித் கோமாளி குழுவினர் எல்லோரும் மணிமேகலையிடம் பிரியங்காவை பற்றி நான் பேசியது தவறு என்று பேசிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மணிமேகலை நான் அப்படியெல்லாம் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியே வந்திருக்கிறார். அந்த எபிசோடு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஒளிபரப்பானது. அப்போது ஒரு விளம்பரம் முடிந்ததும் அதைத்தொடர்ந்து மணிமேகலை இனி நிகழ்ச்சியில் தொடர மாட்டார் என்று சொல்லியபடி ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கூட பிரியங்காவின் வருகையை ரக்ஷன்தான் முழுக்க பேசி இருக்கிறார். எந்த இடத்திலும் பிரியங்கா பற்றி மணிமேகலை பேசாமல் தவிர்த்து இருக்கிறார். அதுபோல மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு உள்ளே போட்டியாளர்களின் முகமும் சரியாக இல்லாமல் தான் இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த எபிசோடு வெளியான பிறகு மணிமேகலை தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்து விட்டேன் என்று போஸ்ட் மற்றும் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் இந்த நேரங்களில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு இன்னும் தெரியாது. சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகமான பேச்சு இந்த சம்பவம் பற்றி தான் இருக்கிறது. இதனால் இந்த வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டால் அதிகமான டிஆர்பி அதிகரிக்கும். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் குறும்படம் போடுவார்கள் ஆனால் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் சண்டை குறும்படமாக வெளியே வந்தால் விஜய் டிவியில் டிஆர்பி அதிகரிக்கும்.
ஏற்கனவே சேனல் தரப்பில் டிஆர்பி அதிகரிப்பதற்காக பல வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது இந்த வீடியோ வெளியாக அதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் மணிமேகலை முதலில் தைரியமாக பேசி இருக்கும் நிலையில் ஒருவேளை மணிமேகலை மீது தவறு இல்லாமல் இருந்தால் விஜய் டிவி கண்டிப்பாக குறும்படம் வெளியிடாது. பிரியங்காவிற்கு ஆதரவாக விஜய் டிவி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மணிமேகலை வைத்திருக்கும் நிலையில் அது உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் வெளிவருவதற்கு வாய்ப்பு இல்லை.
ஏற்கனவே மணிமேகலை வெளியிட்ட வீடியோவிற்கு பிரியங்கா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இப்போது வரைக்கும் வராமல் இருக்கிறது. அதனால் குறும்படம் வெளியாகுமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications