நடிகை விசித்ராவின் மகன் இந்த பிரபலம் தானா..? இதை கவனித்தீர்களா..? உருக்கமான பதிவு
சென்னை: நடிகை விசித்ரா குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் விசித்திரா அவருடைய மகனோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விசித்திராவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை விசித்ராவின் மகன் யார் என்றும் அவரைப் பல தகவல்களையும் விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவராக நடிகை விசித்திரா இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் இப்போதும் மறக்க முடியாமல் ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவராக விசித்திரா இருக்கிறார். அதுபோல இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் விசித்திரா நடிக்கிறார்.
அதே நேரத்தில் 1991 ஆம் ஆண்டுதான் முதல் முதலாக தமிழ் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுவும் மாமி சின்ன மாமி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி போன்ற பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் திருமணம் ஆகி பூனேவில் செட்டில் ஆகி இருந்தார்.
அதிலும் முத்து திரைப்படத்தில் நடிகர் செந்திலுக்கு ஜோடியாக விசித்திரா நடித்து இருப்பார். குணச்சித்திர வேடங்களிலும் காமெடியாகவும் அந்த காலகட்டத்தில் அதிகப்படியான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விசித்திரா திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு குக்காகவும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் ஜெயிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் கடைசி நேரத்தில் இவருக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய மகனோடு விசித்திரா எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது வேகமாக பகிர்ந்து வருகிறது. இந்த வகையில் விசித்ரா அவருடைய மகன் ரோகன் சாஜி இருவரும் அதிகமான புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர். தன்னுடைய மகன் மீது தனக்கு இருக்கும் பாசத்தை அந்த புகைப்படங்களில் விசித்திரா காட்டியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த கதாநாயகன் உருவாகிவிட்டார் போல என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications