குக் வித் கோமாளியில் இருந்து விலகும் பிரபலம்!? அப்போ அப்படி பதிவு போட்ட இவரா இப்போ இப்படி மாற்றம்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலையை தொடர்ந்து மற்றொரு பிரபலமும் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் இருந்து குரோஷி வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தன்னுடைய twitter கணக்கில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நன்றி சொல்லி குரோஷி போட்ட ட்விட் தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் மணிமேகலையும் திடீரென்று பதிவு வெளியிட்டு தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் தகவலை கூறினார். அதைத்தொடர்ந்து தற்போது குரோஷி வெளியிட்ட பதிவும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நான்காவது சீசன்

நான்காவது சீசன்

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளை விட சற்று வித்தியாசமான நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் அதிகமான சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை கோமாளி என்கிற பெயரில் வைத்துக்கொண்டு ஒரு குக் சமைக்கும் சமையல் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. முதல் சீசனில் கிடைத்த வெற்றி, வரவேற்பு காரணமாகவே தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கோமாளிகள்

கோமாளிகள்

இதில் பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரோஷி, மணிமேகலை ஆகிய நான்கு பேர் மட்டுமே இந்த சீசனில் தொடர்ந்து வந்தனர். அவர்களில் திடீரென மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். ஏற்கனவே அதிகமாக ரசிக்கப்பட்ட பாலா இந்த சீசனில் வரவில்லை. சிவாங்கியும் குக்காக இருந்து கோமாளியாக தற்போதைய சீசனில் மாறி இருக்கிறார். இந்த நிலையில் புதிய கோமாளியாக ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலர் அறிமுகமாகி இருக்கின்றனர்.

புதிய குக்குகள்

புதிய குக்குகள்

இந்த நிலையில் குக்காக இந்த சீசனில் ஸ்ருஷ்டி டாங்கே, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் ஷெரின்,ரஜினியுடன் முத்து படித்தில் நடித்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் விசித்ரா, நாய் சேகர் படம் இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா, மைம் எனும் கலையில் கோல்ட் மெடலிஸ்ட் ஆக இருக்கும் கோபி மற்றும் சிவாங்கி ஆகிய 10 பேர் குக்காக இருந்து வருகின்றனர். இதில் நாய் சேகர் பட கிஷோர் மற்றும் காளையன் ஆகிய இரண்டு குக்குகள் வெளியேறி இருக்கின்றனர்.

மாற்றப்பட்ட பதிவு

மாற்றப்பட்ட பதிவு

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு திடீரென்று மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் தெரிவித்தார். அவர் விலகல் குறித்து சரியான காரணம் எதுவும் இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் குரோஷி நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் தன்னுடைய twitter பக்கத்தில்," பல நல்ல நினைவுகளை கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நன்றி" என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் பலரும் ரோஸி நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் பரப்பி வந்தனர். இந்த செய்தி தீயாக பரவ தொடங்கிய நிலையில் தற்போது அந்த ட்விட் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும்," உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு" என்று மீண்டும் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். உண்மையில் அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+