குக் வித் கோமாளியும், பிக் பாஸூம் இணைய போகிறது.. அட கமல் வருகிறாரா? வெளியான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர் பார்க்காத புது சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
அனைவரும் இந்த வாரத்தில் செமி பைனல் நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் நான்கிற்கான ஜூலை 1 மற்றும் 2ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நான்காவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்று ஆர்வம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான வெளியான ப்ரோமோ தற்போது பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கிறது.

காரணம் இந்த வாரம் மீண்டும் தொகுப்பாளராக மணிமேகலை கலந்து கொண்டிருக்கிறார். அதோடு அவர் சொன்ன வார்த்தை மேலும் பலருக்கும் ஆச்சரியம்தான். மேலும் அவர் பேசுகையில் நீங்க நினைக்கிற மாதிரி இந்த வாரம் செமி பைனல் கிடையாது என்று கூறியிருக்கிறார். இது குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.
ஏனென்றால் கடந்த வாரமே டாப் 5 போட்டியாளர்களில் யார் முதலாவதாக சேவ் ஆகிறர் என்ற போட்டி நடைபெற்றது. அதில் விசித்திரா தேர்வாகி இருந்தார். இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்த வாரமும் போட்டிகள் நடைபெறும் அல்லது செமி பைனல் நடைபெறும் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜூலி, பாலாஜி முருகதாஸ், ஜனனி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஐஸ்வர்யா என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பார்த்த கோமாளிகள் அப்போ கமல் சார் வருவாரா? என்று ஆர்வத்தோடு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆர்வம் ரசிகர்களுக்கும் இருப்பதாக தற்போது கமெண்டுகள் குவிகிறது. ஆனாலும் இந்த வாரம் குக் வித் கோமாளியில் செம ரகளை காத்திருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications