CWC season 4.. டைட்டில் வின்னரை ஜெயிக்க வைத்தது இவரா..? அடேங்கப்பா இவ்வளவு பரிசுகளா?
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் ஆக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரை ஜெயிக்க வைத்ததற்காக குரோஸி மற்றும் மோனிஷாவிற்கு பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
பரிசுத்தொகை பெற்ற குரோஸி மற்றும் மோனிஷா இருவரும் உருக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி பேசி இருக்கின்றனர்.

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தை மைம் கோபி என்ன செய்தார் என்றும் நான்காவது சீசனின் கடைசி நாளில் என்ன நடந்தது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீசன் டைட்டில் வின்னராக சிவாங்கி தான் இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த தகவல் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி இருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த வாரமே கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கான சூட்டிங் முடிவடைந்தது. அப்போதே யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் லீக் ஆகிவிட்டது. அதைத்தொடர்ந்து அதிகமானால் மைம் கோபிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதுபோலவே கடைசியில் நேற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மைம் கோபி தான் ஜெயித்ததும் தனக்கு கொடுக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் இது என்னுடைய பணம் அல்ல இது இல்லாதவர்களுக்கானது என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படியே கொடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து மைம் கோபிக்கு மேலும் 60 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல்
ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு கிப்ட் வவுச்சர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதுபோல மைம் கோபியை ஜெயிக்க வைத்ததற்காக குரோஸி மற்றும் மோனிஷா இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதுபோல இருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வவுச்சரும் கிடைத்தது. நேற்று 5 மணி நேரமாக கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றதில் இரண்டு ரவுண்டுகளாக சமையல் டாஸ்க் நடைபெற்றது. அதில் குரோஸி மற்றும் மோனிஷா தான் மைம் கோபியோடு இணைந்து சமையல் செய்து இருக்கின்றனர். கடைசியில் அவர்களால் தான் மைம் கோபி ஜெயிக்க பட்டார் என்று அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications