குக் வித் கோமாளியில் நெப்போலியன்.. அதுவும் ஸ்பெஷல் மீன் குழம்பு.. இர்பான் பிளானுக்கு ஆப்பா?
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த வாரம் ஸ்டார் ஸ்பெஷல் சுற்று நடைபெறுகிறது. அதில் பல பிரபலங்களுக்கு பிடித்தமான உணவுகள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமையல் செய்கிறார்கள். அந்த வகையில் நடிகர் நெப்போலியனுக்கு பிடித்த மீன் குழம்பு இந்த நிகழ்ச்சியில் ரெடி செய்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல சுவாரசியமான தருணங்கள் நடைபெறும். அந்த மாதிரி இந்த சீசனிலும் சில என்டர்டைன்மென்ட் எபிசோடுகள் இருந்தது. அதிலும் மகாராஜா திரைப்பட பிரமோஷனுக்காக விஜய் சேதுபதி, நட்டி போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எபிசோடு மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் 8 நடிகர், நடிகைகளுக்கு பிடித்தமான உணவுகள் சமைக்கப்படுகிறது. அதில் அஞ்சலி, தமன், கௌதம் கார்த்திக், லைலா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர் ஜே பாலாஜி, சசிகுமார், நெப்போலியன் போன்ற பலருக்கு பிடித்தமான உணவுகள் சமைக்கப்படுகிறது.
நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடைப்பெற்று இருக்கிறது. எங்கேஜ்மென்டுக்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.
நெப்போலியன் வருங்கால மருமகள் திருநெல்வேலி மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர். இது குறித்த செய்திகள் தான் இணையத்தில் சில நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெப்போலியன் பேசி இருப்பது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெப்போலியன் வந்ததற்கு காரணம் இர்ஃபான் தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நெப்போலியனின் நெருங்கிய நண்பராக இர்ஃபான் நெப்போலியன் குடும்பத்தை சந்திப்பதற்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் நிலையில் இர்ஃப்பானுக்காக தான் நெப்போலியனும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசி இருப்பார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அட்வான்டேஜ் டாஸ்கை பூஜா மற்றும் புகழ் ஜெயித்து இருக்கின்றனர். அட்வான்டேஜ் டாஸ்க் படி வேறு ஒரு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கே இன்னொரு போட்டியாளருக்கு மாற்றிக் கொடுக்கலாம். அதுபடி புகழ் குரோஸி மற்றும் அக்ஷய் தமிழ் டீமிற்க்கு கொடுக்கப்பட்ட மீன் குழம்பு செய்யும் டாஸ்கை இர்ஃபானுக்கு கொடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் அப்போ இந்த வாரம் அட்வான்டேஜ் டாஸ்க் ஜெயித்த பூஜா மற்றும் புகழ் நெப்போலியலுக்காக இர்ஃபான் தான் சமைக்க வேண்டும் என்று புது பிளான் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் தானா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இர்ஃபான், நெப்போலியனுக்கு சமைச்சு கொடுக்க வேண்டும் என்று இவர்கள் புது ப்ளான் போட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications