CWC 5: டைட்டில் வின்னர் பிரியங்கா? ஆனால் இரண்டாவது இடத்தில் இவங்களா? அதனால்தான் வாய் திறக்கலையா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் இருக்கிறது. ஆனால் சூட்டிங் முடிவடைந்த நிலையில் டைட்டில் வின்னர் மற்றும் இரண்டாவது இடத்தில் யார் வெற்றி பெற்றார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் இல்லாத வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனைகள் தான் இருந்தது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வெங்கடேஷ் பட் தான் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து விலகுகிறேன் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர். பிறகு ஐந்தாவது சீசன் தொடங்குமா? இல்லையா? என்ற கேள்விகளோடு இருந்த நிலையில் விஜய் டிவி தரப்பில் புது கூட்டணியில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது.

television vijay tv manimegalai

ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன் விலகி இருந்தார். அதற்கு அவர் எனக்கு சேனல் தரப்பில் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் நிகழ்ச்சியின் தயாரிப்பு தரப்பில் எனக்கு சரியாக அங்கீகாரம் கொடுக்கவில்லை. நாம் கேட்டாலும் எதுவும் பதில் சொல்லவில்லை கோமாளியாக அவர்கள் தான் கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் நமக்குள்ள முக்கியத்துவம் அங்கு கொடுக்கப்படவில்லை என்று பேசியதும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் தருணத்தில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிரியங்கா தான் இதற்கு காரணம் என்று மறைமுகமாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுவும் பெரிய அளவில் இப்பவரைக்கும் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கான இறுதிகட்ட சூட்டிங் முடிவடைந்துவிட்டது என்று தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

television vijay tv manimegalai

இந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரியங்கா தான் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அது குறித்து பிரியங்காவின் நண்பரான பிக் பாஸ் அமீர் பேட்டி ஒன்றில் கூட பேசி இருந்தார். அபிசியல் ஆக விஜய் டிவி இன்னும் பிரியங்கா தான் ஜெயித்தார் என்று அறிவிக்கவில்லை. ஆனால் அன் அபிசியல் ஆக நான் இதை சொல்கிறேன். பிரியங்கா டைட்டில் வெற்றி பெற்று விட்டார்.

நாங்கள் அந்த வெற்றியை கூட கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் யார் வெற்றி பெற்றார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் இரண்டாவது இடத்தில் இர்ஃபான் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரியங்கா மற்றும் இர்ஃபான் இருவரும் தான் இந்த நிகழ்ச்சியில் அக்கா தம்பி உறவு வைத்து பேசியது ஒரு சிலரால் பாராட்டப்பட்டாலும் ஒரு சிலர் இதை திட்டி தீர்த்து வந்தனர்.

television vijay tv manimegalai

இந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரும் தான் முதல் இரண்டு இடங்களுக்கு வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சுஜிதா தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று இதில் கலந்துகொண்ட பலரும் கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. பிரியங்காவிற்கு ஆதரவாக சில தினங்களாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் சுஜிதா இதனால்தான் வீடியோ வெளியிடவில்லையா? என்றும் கேள்விகள் வருகிறது. அதுபோல இர்ஃபான் இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் டீப்பாக இருந்தார். ஆனால் பிரியங்காவிற்கு ஆதரவாக அவரும் ஒரு வீடியோ கூட வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+