குக் வித் கோமாளி 5: மாஸா வரப்போகுது.. அப்டேட் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜன்.. தாமு கொடுத்த ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் ஐந்தாவது லான்ச் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இதுவரைக்கும் பேசாமல் இருந்த மாதம்பட்டி ரங்கராஜன் முதல் முறையாக இந்த ப்ரோமோவில் பேசி இருக்கிறார். அதில் செஃப் தாமுவோடு இந்த சீசனில் ஜோடியாக சேர்ந்திருக்கிறேன். இந்த சீசன் களைக்கட்ட போகிறது.. அதுவும் விரைவிலே நீங்கள் எதிர்பார்த்த குக் வித் கோமாளி தொடங்கப் போகிறது என்று கூறியிருக்கிறார்.

அதுபோல தாமுவும் அந்த ப்ரோமோவில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

Cook with comali Season 5 launch promo 5 fans reaction

ரியாலிட்டி நிகழ்ச்சி: ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது.

ஐந்தாவது சீசன்: அந்த வகையில் நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஐந்தாவது சீசன் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பும் சந்தேகங்களும் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடுவர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று அடுத்தடுத்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி இனி நடக்காது என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். அந்த நேரத்தில் தான் விஜய் டிவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

புதிய நடுவர்கள்: அதாவது நடுவராக இருந்து விலகிய வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக நடிகராகவும் சமையல் கலைஞராகவும் இருக்கும் "மாதம்பட்டி ரங்கராஜன்" தாமுடன் இணைந்து இருக்கிறார். அதுபோல வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் பலரும் இந்த சீசனிலும் தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

புதிய குக்குகள்: அதே நேரத்தில் குக்காக இந்த சீசனில் பிரியங்கா தேஷ் பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் வசந்த், நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் வி.டி.வி கணேஷ், youtuber இர்பான் என்று பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்பார்க்காத கோமாளி: அதே நேரத்தில் இந்த சீசனில் கோமாளியாக சீரியல் நடிகை ஷபி களமிறங்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. காரணம் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான். அந்த பதிவில் குக் வித் கோமாளி ப்ரோமோவை பகிர்ந்த ஷபி இந்த நிகழ்ச்சிக்காக தான் அதிகமாக காத்திருப்பதாக கூறி இருந்தார். இதனால் இவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோமாளிகள்: இப்படியான நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் வழக்கமாக இருக்கும் கோமாளிகள் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதில் குரோஷி,புகழ், ராமர் மற்றும் சுனிதா என நான்கு பேரும் இதில் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் பேசியிருக்கின்றனர்.

ஐந்தாவது லான்ச் ப்ரோமோ: அதில் தாமு, பேசுகையில் எல்லாருக்கும் வணக்கம் நான் தாமு. என்னுடைய பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 5 ஸ்டார்ட் ஆகிவிட்டது. இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் பார்த்தீங்கனா... எப்படி சாப்பாட்டில் எத்தனை ஸ்பெஷல் இருக்கிறதோ அதுபோல இந்த சீசனிலும் அதிகமான ஸ்பெஷல் இருக்கப் போகிறது.

செஃப் தாமு: கண்டிப்பா நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுவீங்க. நீங்க ரொம்ப நாளா எப்ப வர போகுதுன்னு எதிர்பாத்து இருந்தீங்க. அதனால் விரைவில் இந்த சீசன் வரப்போகிறது. நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுங்க என்று கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், ஹாய் எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் மாதம்பட்டி ரங்கராஜ். குக் வித் கோமாளி சீசன் 5 மாஸா, கிளாஸா வரப்போகுது. என்னோட பார்ட்னர் செஃப் தாமு சார். இந்த சீசனில் நாங்க இரண்டு பேரும் தான்.

மாதம்பட்டி ரங்கராஜ்: நான் அவர் கூட ஜாயின் பண்ணி இருக்கிறேன். உங்க எல்லாரையும் டிஃபரண்டா ஒரு என்டர்டைன்மென்ட் மோடுக்குள் கொண்டு போகப் போகிறோம் என்று பேசியிருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது என்று மாதம்பட்டி ரங்கராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பேசிய ப்ரோமோ வெளியாகி இருப்பது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது பக்கத்தில் இருந்த செஃப் தாமோ தன்னுடைய உடைகளை சரி செய்து கொண்டே இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தாமு சார் இப்போதே தன்னுடைய விளையாட்டை தொடங்கி விட்டார். இனி நிகழ்ச்சி தொடங்கியதும் அவரை கையில் பிடிக்க முடியாது என்று கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+