ஸ்கூலில் பட்ட அவமானம்.. பயத்தில் வந்த பதட்டம்.. சாதித்தது இப்படிதான்.. மாதம்பட்டி ரங்கராஜன் எமோஷனல்
சென்னை: "மெஹந்தி சர்க்கஸ்" திரைப்படத்தின் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த மாதம்பட்டி ரங்கராஜன் நடிகராக மட்டுமல்லாமல் செஃப்பாகவும் பல பிரபலங்களின் பங்க்ஷனில் சமைத்து பிரபலம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் நடுவராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய ஆரம்ப காலம் குறித்தும், தான் எப்படி தன்னுடைய தடைகளை தகர்த்து வெற்றி பெற்றேன் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நடிகராகவும், செஃப்பாகவும், குக் வித் கோமாளி நடுவராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இப்போதுள்ள இளம் தலைமுறையினர் கொண்டாடும் பிரபலமாக மாதம்பட்டி ரங்கராஜன் இருந்து வருகிறார்.
சாதாரணமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போது பல நாடுகளுக்கு சென்று சமைத்து அசத்தி வருகிறார். இப்படியான நிலையில் அவர் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேசுகையில், நான் என்னுடைய உடை மற்றும் என்னை கவனிப்பதற்காக அதிகமாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அது குறித்து பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
பொதுவாக ஒருவர் நம்மை சரியாக கவனித்துக் கொண்டால்தான் நம்முடைய வெற்றியை நோக்கி நம்முடைய பயணத்தில் தைரியமாக போக முடியும். அதற்காகத்தான் நான் என்னுடைய உடை முதல் எனக்கு தேவையான பொருள்கள் எது வேண்டும் என்றாலும் உடனே வாங்கி விடுவேன். ஆரம்ப காலகட்டத்தில் நான் ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுட்டு போவதற்கு கூட முடியாத நிலையில் தான் இருந்திருக்கிறேன்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஒருமுறை நான் முதல் நாள் ஸ்கூலுக்கு போகும்போது யூனிபார்ம் வாங்கி தைத்து போட்டு போகாததால் என்னை முழங்கால் போட வைத்து விட்டனர். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்போது எனக்கு கிடைக்காத என்னுடைய ஆசைகளை தான் நான் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். விதவிதமாக டிரஸ் போடுகிறாரே என்று பலரும் கேள்வி கேட்கலாம். ஆனால் அது என்னுடைய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்கிறது.
நான் மட்டுமல்ல எல்லோருமே அதை செய்தால் நம்முடைய தன்னம்பிக்கை கூடும். நான் சொந்தமாக கேரவன் பயன்படுத்தி வருகிறேன். அது என்னுடைய தொழிலுக்கும் என்னை கவனித்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது. அதுபோல எனக்கு இன்னொன்று ஞாபகம் இருக்கிறது. நான் ஸ்கூல் லைப் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். அப்போ ஒரு முறை லீவில் கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்ந்தேன்.
அங்கு முதல் நாள் அங்கிருந்தவர்கள் எல்லாரையும் பார்த்து எனக்கு பதட்டத்தில் வேர்த்து விறுவிறுத்து மயக்கமே வந்துடுச்சு. எல்லார் முன்பும் எப்படி ஹாண்டில் பண்ணனும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்று நான் பல நாடுகளுக்கு சென்று சமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த பயம் இதெல்லாம் தேவையில்லாதது என்று எனக்கே தெரிந்து விட்டது.
அதுபோல எல்லோரும் நாம் என்ன ஆகப் போகிறோம் என்பதை உறுதியாக தீர்மானித்து விட்டால் அதை நோக்கி சரியான நம்முடைய வாழ்க்கை போய்க் கொண்டே இருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இப்போது நடுவராக இணைந்து இருக்கிறேன். ஏற்கனவே நான் திரைப்படங்களில் நடித்து விட்டதால் கேமரா பயம் இல்லை. அதுபோல இந்த செட்டில் எல்லோரும் பாசிட்டிவ் வைப்பாகவே இருக்கிறார்கள். இப்போதும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications