CWC 5க்கு என்ன ஆச்சு? திடீர்னு விலகிய நாஞ்சில் விஜயன்.. அதுவும் காரணம் இதுதானா? அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து "நாஞ்சில் விஜயன்" தான் விலகப் போவதாக instagramயில் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதே நேரத்தில் நான் எதற்காக விலகப் போகிறேன் என்பது பற்றியும் அதில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்த நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் வெளியேறப் போகிறேன் என்று திடீரென்று அறிவித்திருந்தார்.

அது குறித்த காரணத்தை அவர் சொல்லவில்லை என்றாலும் விரைவில் புது நிகழ்ச்சியில் நான் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று எல்லோருமே அடுத்தடுத்து விலகிக் கொண்டிருந்தனர். இதனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில் இப்போது புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் இணைந்து இருக்கிறார்.
அதோடு பல புதிய கோமாளிகள் மற்றும் குக்குகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென்று நாஞ்சில் விஜயன், "நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறேன். எனக்கு விஜய் டிவியோடு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ள மாட்டேன். இத்தனை நாட்களும் சப்போர்ட் செய்ததற்கு நன்றி மக்களே!" என்று கூறியிருக்கிறார்.
இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் முதல் ஆளாக சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில், "அவர்களுக்கு ஆயிரம் கலைஞர்கள் கிடைப்பார்கள். உன்னை போன்ற கலைஞருக்கு ஆயிரம் மேடைகள் கிடைக்கும். மேன்மேலும் நீயும் உன் புகழும் வளர்ச்சி அடைய உங்களது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவராக வாழ்த்துக்கள்.." என்று கூறியிருக்கிறார். அதுபோல பல ரசிகர்கள் நாஞ்சில் விஜயனின் முடிவை பாராட்டி வருகிறார்கள்.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications