CWC 5: சாப்பாட்டை வைத்து கிண்டல் செய்த வனிதா.. திருமண விஷயத்தை வைத்து பதிலடி கொடுத்த பிரியங்கா
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மார்ச் 27ஆம் தேதி சனிக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. அதில் தொடக்க நாளில் முந்தைய போட்டியாளரான வனிதா கலந்து கொண்டிருந்தார். அப்போது குக்காக கலந்து கொண்டிருக்கும் பிரியங்கா திருமண வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டு கலாய்த்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை திறந்த புத்தகமாக இருக்கிறது. முதல் திருமணம் அவருக்கு ஏமாற்றத்தில் முடிய அதைத் தொடர்ந்து இரண்டு திருமணங்களை செய்து கொண்ட வனிதா தற்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவிற்கு சின்னத்திரை வெள்ளி திரையில் வாய்ப்புகள் அமோகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட நடிகை சோனியா அகர்வாலோடு முக்கிய கேரக்டரில் "தண்டு பாளையம்" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படமும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது.
இப்படியான நிலையில் கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனிதா கடந்த வாரத்தில் குக்குகளுக்கு வழங்கப்பட்ட டாஸ்க்குகள் குறித்து பேசுவதற்காக வந்திருந்தார். இவரும் நடிகை வித்தியுலேகாவும் கலந்து கொண்ட போது குக்குகளிடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதிமுறைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பிரியங்காவை பார்த்ததும் நீங்க எல்லாரும் சமைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் சமைச்ச சாப்பாடு பிரியங்காவிடமிருந்து காப்பாத்தறது உங்க வேலை. சாப்பாடு பத்திரம் என்று சொல்ல, அதற்கு பிரியங்கா சட்டென்று இவங்க சமைக்கிற சாப்பாடு இருக்கட்டும் "நீ எப்போ அக்கா கல்யாண சாப்பாடு போட போற" என்று கேட்க, அதற்கு வனிதா சிரித்து சமாளித்து இருந்தார்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வனிதா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போதும் அவரிடம் சிலர் வனிதாவிற்கு அடுத்த திருமணம் எப்போது என்று தான் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு வனிதா அது நடக்கும்போது நடக்கும் அடுத்த திருமணம் நடந்தால் தமிழ்நாட்டுக்கே போஸ்டர் அடித்து சொல்லி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications