குக் வித் கோமாளி சீசன் 5: இந்த முறை கோமாளிகள் இவங்கதானா? மீண்டும் மணிமேகலை.. ராமர் என்ட்ரி அசத்தல்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த சீசனில் தொகுப்பாளர்கள் மற்றும் கோமாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் இந்த சீசனில் நடுவர்களை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் இப்போது கோமாளிகளை வித்தியாசமாக அறிமுகப்படுத்தின்றனர். இது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்திருந்த நிலையில் ஐந்தாவது சீசன் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் இருந்தனர். காரணம் இந்த நிகழ்ச்சியில் இத்தனை சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து எல்லாருமே வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இதனால் இனி ஐந்தாவது சீசன் நடக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக போகிறது என்று உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அதுவும் இந்த சீசனில் நடுவராக செப் தாமுவும் அவரோடு நடிகர் மற்றும் சமையல்கலைஞராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் இருவரும் இணைந்து இருக்கின்றனர்.

இவர்கள் இருவரையும் வரவேற்று முதல் ப்ரோமோ வெளியாகியிருந்த நிலையில் இப்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீசனையும் ரக்சன் மற்றும் மணிமேகலை இரண்டு பேரும் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். அதுபோல வழக்கமான கோமாளியாக சுனிதா மற்றும் குரேஷி இந்த சீசனிலும் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் இருவருக்கும் விமானத்தில் கெத்தாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், குரேஷி நமக்கே இந்த வரவேற்பு என்றால் முதல் சீசனில் இருந்தே கோமாளியாக இருக்கும் புகழுக்கு எந்த மாதிரி வரவேற்பு இருக்கும் என்று சொல்ல, புகழ் சைக்கிளில் மிதிக்க முடியாமல் சைக்கிளை மிதித்தபடி வருகிறார். அதோடு நமக்கு பிளைட் என்று சொன்னதும் நாம எனக்கு தனி பிளேட் என்று கேட்டது எவ்வளவு பெரிய தப்பா போச்சு.

இப்படி சைக்கிள் மிதிக்க விட்டுட்டாங்களே என்று புலம்பிக் கொண்டே வர அந்த இடத்தில் ராமர் புகழிடம் லிப்ட் கேட்கிறார். அதுவும் சமையல்காரர் உடையில் அவர் இருக்க, ராமரிடம் எங்க போறீங்க என்று புகழும் கேட்க, அதற்கு ராமர் ஏதோ குத் வித் கோமாளியாம் அதுல நான் குக்காக போகிறேன் என்று சொல்ல, அதற்கு புகழ் குக்காக போனால் ஒரு சீசன் மட்டும்தான்... கோமாளியாக போனால் எல்லா சீசனிலும் இருக்கலாம் என்று சொல்ல அப்போ நானும் கோமாளி வருகிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இப்போது நான்கு கோமாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications