குக் வித் கோமாளியில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஜோயா.. போகும்போது கண் கலங்க சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஷாலின் ஜோயா எலிமினேஷன் ஆகி இருக்கிறார். இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் இவருடைய சமையல் நடுவர்களை கவரவில்லை என்று கூறி அவர் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். அப்போது கண்கலங்க ஷாலின் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிகர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் மற்றும் குக்குகள் ஜாலியாக செய்யும் அலப்பறைகளும் இவர்களுடைய சமையலுக்கு நடுவர்களின் தீர்ப்பு என்று இந்த நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். முதல் சீசனில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து இதில் கலந்து கொள்ளும் நடிகர்களுக்கும் நல்ல பிரபலம் கிடைத்திருக்கிறது. அதனாலயே பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக ஷாலினி ஜோயா இருந்து வருகிறார்.
இவர் ஆரம்பத்தில் பல்வேறு சீரியல்கள் மற்றும் சின்னதிறை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுபோல ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருக்கிறார். கண்ணகி உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் குழந்தைத்தனமாக பேசி அதிகமான கண்டாண்டு கொடுக்கிறார், அதனால் தான் இவர் ஒவ்வொரு எலிமினேஷனில் இருந்து இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று சில நெகட்டிவ் கருத்துகளும் பரவி வருகிறது.
அதிலும் கடந்த எலிமினேஷனில் நடிகர் வசந்த் வசி வெளியேற்றப்பட்ட போது அதிகமான ரசிகர்கள் சமையல் பெரிய அளவில் தெரியாத ஷாலின் ஜோயா இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே நன்றாக சமையல் தெரிந்த வசந்த் வசி வெளியேற்றப்பட்டு விட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் ஷாலின் ஜோயா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே நேற்றும் ஷாலின் ஜோயா விதிமுறைகளை மீறி இருக்கிறார் என்று நடுவர்களால் கண்டிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இன்று அவருடைய சமையல் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை என்று அவர் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். அப்போது எல்லோரும் வழக்கம் போல அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். அந்த நேரத்தில் ஜோயா உருக்கமாக பேசியிருந்தார். நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது.
ஆனாலும் நடுவர்கள் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு இந்த நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. எங்க அம்மாவிற்க்கு நான் புடவை கட்டி கையில் வளையலோடு இந்த நிகழ்ச்சியில் வரவேண்டும் என்று ரொம்பவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நினைத்த மாதிரி நான் இந்த வாரம் வந்து விட்டேன்.
அதோடு நான் வெளியே போவது எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் இப்போது வெளியே போனாலும் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஜோயா அழுது விடுகிறார். அவரை சக போட்டியாளர்கள் ஆறுதல் செய்து அனுப்பி வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications