ஜோயாவிற்காக இர்ஃபானை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி.. என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது ஜோயாவை கிண்டல் செய்த யூடியூப்பர் இர்ஃபானுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ் செய்ததை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் திரையரங்கில் வெளியானதை தொடர்ந்து அதை ப்ரொமோட் செய்யும் விதமாக விஜய் சேதுபதி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கோமாளிகள் எல்லோரும் விஜய் சேதுபதி பட கெட்அப் போட்டு வந்து அசத்தி இருந்தனர்.

அப்போது விஜய் சேதுபதி பேசிய சுவாரசியமான வீடியோக்கள் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜோயா குழந்தை போல நடந்து கொள்கிறார் என்று ஒரு பக்கம் அவருக்கு ஆதரவு கூடி வருகிறது. இன்னொரு பக்கம் இவர் சிவாங்கி போல கிரென்ச் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று இவருக்கு நெகட்டிவ் கமாண்டுகளும் வந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் இர்ஃபானுக்கும் அதே நிலைதான். அவர் பல சாப்பாடுகளை ரிவ்யூ செய்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் சமையல் செய்வதை வைத்தும் சிலர் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி முன்பு ஜோயா பற்றி இர்பான் பேசியது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒருமுறை ஜோயா தன்னுடைய டேபிளில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது அந்தப் பக்கமாக வந்த விஜய் சேதுபதி ஜோயாவிடம் என்னம்மா நீ டைரக்டர் என்று பசங்க சொல்லுறாங்க என்று கேட்க, அது ஜோயா காதில் டயட் என்று விழுந்திருக்கும் போல,
அதற்கு ஜோயா ஆமா சார் நான் டயட்டில்தான் இருக்கிறேன் நேற்று சாப்பிட்டது சேரல, ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு அதனால நான் இன்னைக்கு காலையில் இருந்து டயட்டில் தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு விஜய் சேதுபதி என்ன நாம ஒன்னு கேட்க இவங்க இன்னொன்னு பேசுறாங்க என்பது போல முழித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் இர்ஃபான் நான் உன்னை டைரக்டர் என்று சொன்னேன் என்று சொல்ல, விஜய் சேதுபதி ஜோயாவிடம் அப்படியா நீங்க டைரக்ட் பண்ணி இருக்கீங்களா? என்று மீண்டும் கேட்க அதற்கு ஜோயா ஆமா சார் 8 ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல பக்கத்தில் இருந்த இர்ஃபான் பார்க்க பேக்கு மாதிரி இருந்துட்டு இவ்வளவு வேலை பார்த்து இருக்கேன்னு சொன்னா நம்பவே முடியல சார் என்று சொல்ல,
அதற்கு விஜய் சேதுபதி புத்திசாலிக்கு ஏதாவது தனியா மூஞ்சி இருக்கா? என்ன என்று இர்ஃபானுக்கு குட்டு வைப்பது போல கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு இர்ஃபான் அப்படி இல்ல சார் இந்த பொண்ணு பார்க்க பேக்கு மாதிரி இருக்குல்ல... என்று மீண்டும் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வேகமாக பரவி வரும் நிலையில் இர்ஃபான் என்னதான் ஜோயாவோடு நட்பாக இருந்தாலும் இப்படியா பலபேர் பார்க்கும் நிகழ்ச்சியில் பேசுவார் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அதுபோல ஜோயா குறித்து விஜய் சேதுபதி மற்ற எல்லா போட்டியாளர்களிடமும் ஏன் இந்த பொண்ணை பார்த்து எல்லாரும் லூசுன்னு சொல்லுறீங்க என்று கேட்க எல்லாரும் தலையை ஆட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது விஜய் சேதுபதி இந்த பொண்ணு இவ்வளவு பண்ணி இருக்கு ஆனாலும் அதை பற்றி வெளியே சொன்னா அவங்களுக்கு தான் ஸ்பேஸ் அதிகமாக கிடைக்கும்.
ஆனால் அதை சொல்லாம உங்க எல்லாருக்கும் ஸ்பேஸ் கிடைக்கிற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கு என்று சொல்லி இருக்கிறார். அதோடு ஜோயாவிடம், ஜோயா அம்மா நீ பண்ணிக்கிட்டு இருக்கிறது சரியா தான் பண்ணிக்கிட்டு இருக்கிறாய். இப்படியே போயிட்டே இரு என்று சொல்ல ஜோயா அழுகிறதா? சிரிக்கிறதா? என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். இந்த கிளிப்ஸ்கள் தான் இப்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் கருத்துக்களை குவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications