குக் வித் கோமாளி பற்றி சிவாங்கி சொன்ன வார்த்தை.. மன்னிப்பு கேட்ட புகழ்.. வருத்தத்தில் விசித்திரா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.
குக் வித் கோமாளி சீசன் 4 வெற்றியாளராக மைம் கோபி வின்னராக தேர்வாகி இருந்தார்.
இந்த நிலையில் இந்த நான்காவது சீசனோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது என்று சில தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதல் சீசனில் கிடைத்த வெற்றியின் காரணமாக அடுத்தடுத்த சீசன் தொடங்கப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கோமாளிகள் இப்போது புகழின் உச்சத்தில் இருக்கின்றனர்.
அதில் பலரையும் சொல்லலாம் ஆரம்பத்தில் சிவாங்கி விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு பாடுவதற்காக வந்து பிறகு அந்த நிகழ்ச்சி அவருக்கு திறமைக்கு சரியான வாய்ப்பு இல்லாமல் அவர் வெளியே வந்த பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவாங்கியின் பாடல் திறமையை மட்டும் அல்லாமல் அவருடைய குறும்புத்தனமும் ரசிகர்கள் மத்தியில் தெரிய தொடங்கியது. அவருக்கு இப்போது பல திரைப்பட வாய்ப்புகளும் பாடல் வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.
அதுபோல புகழ் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருடைய புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்போது பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இத்தனை பேருக்கு பிரபலத்தை கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போதைய நான்காவது சீசன் உடன் முடிவுக்கு வர இருக்கிறது என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுபோல இந்த நிகழ்ச்சிக்கான டிஆர்பியும் திருப்திகரமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை நிறுத்துவதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவுதான். ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை.
அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று டைட்டில் வின்னர் ஆக மைன் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இந்த சீசனில் டைட்டில் வின்னர் சிவாங்கி தான் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் செய்த மாற்றம் காரணமாக பலர் விஜய் டிவி பாராட்டி வருகிறார்கள். ஆனால் சிவாங்கியின் ரசிகர்கள் தொடர்ச்சியாக விஜய் டிவியை திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கடைசி நாள் என்று உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட விசித்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அதில் இப்ப நான் ஏக்கமாக இருப்பதாக உணர்கிறேன். குக் வித் கோமாளிக்காக நான் ஆறு மாதங்களாக நான் சந்தோஷமாக இருந்தேன். என்னுடைய முதல் நாள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளராக நான் ஆனேன். அதுபோல இன்று கடைசி நாள் நான் வெற்றியாளராக கோப்பையோடு வெளியேறி இருக்கிறேன். இந்த தருணத்தில் நான் இன்று என்னுடைய பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த சில நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமும் வாழ்த்துக்களும் அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் போல வேடமிட்ட புகைப்படத்தை பகிர்ந்து "எனக்கு வாழ்க்கை பாதையை உருவாக்கி புகழ் என்று ஒருத்தன் இந்த கலை துறையில் இருக்கான்னு காட்டியது இந்த பெண் வேடம்தான். என் உணர்வுக்கும் உயர்வுக்கும் உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்து வரும் அன்பு உணர்வுகள் உறவுகளுக்கு என் அன்பு முத்தங்கள் என்று கூறி, சாரி ஷெரின் உங்ககிட்ட கேட்காம உங்க கெட்டப் போட்டுட்டேன் என்று கூறி இருக்கிறார். அதற்கு ஷெரின், "நீ ரொம்ப ஹார்ட் பேபி" என்று பதில் கொடுத்திருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications