தெலுங்கு குக் வித் கோமாளிக்கு போன சிறகடிக்க ஆசை மீனா.. ராதா முன்பு இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரீமேக் தெலுங்கில் குக் வித் ஜாதி ரத்னலு என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோமதி பிரியா போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொண்ட முதல் நாள் எபிசோட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதை பலமொழிகளிலும் டப் செய்து விடுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி கூட இப்படித்தான் ஒளிபரப்பானது. அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் போது பெரிய அளவில் விமர்சனங்கள் வந்தது. அது எப்படி பிரபலங்கள் சமைக்கும் போது கோமாளி என்று ஒருவர் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் போது சமைக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
அதுபோல இன்னும் ஒரு சிலர் ரியாலிட்டி ஷோ போல இருக்காது காமெடி நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் கமெண்ட் கொடுத்திருந்தனர். இன்னும் சிலர் இது ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்றும் கமெண்ட் கொடுத்து இருந்தனர். இப்படி பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பிறகு நல்ல பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வந்தது. மக்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றது. பலர் இதை ஸ்ட்ரஸ் ப்ரீ நிகழ்ச்சி என்று கூட சொல்லி வந்தனர். முதல் சீசனிலிருந்து நான்கு சீசனுக்கு வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக இருந்தனர்.
ஆறாவது சீசன்
அதேபோல மீடியா மேஷன்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்தது. ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து பலர் விலகி இருந்தனர். இப்போது ஆறாவது சீசனும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் முதல் நான்கு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு இப்போது இதற்கு கிடைக்கவில்லை. பல புது முகங்களும் எதிர்பாராத போட்டியாளர்களையும் களம் இறக்கி இருந்தனர்.
குக் வித் கோமாளி போட்டியாளர்கள்
அதிலும் பிரியா ராமன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராஜு ஜெயமோகன், சுந்தரி அக்கா போன்றோரெல்லாம் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மலையாளத்தில் இதை குக் வித் காமெடி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. அதற்கு அடுத்ததாக கன்னடத்தில் குக்கு வித் கிறுக்கு என்ற பெயரில் ஒளிபரப்பானது.
Ready to serve the fun! 🥳#CookuWithJathirathnalu GRAND LAUNCH is here!🍛🎉#CookuWithJathirathnalu Grand launch on 28th June only on #StarMaa pic.twitter.com/sq7qZyTstZ
— Starmaa (@StarMaa) June 23, 2025
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை
பெங்காலியில் இந்த நிகழ்ச்சியை கோலி மேல் கோல் என்ற பெயரில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் இப்போது தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு குக் வித் ஜாதி ரத்னலு என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தான் இப்போது விஜய் டிவி பிரபலமான நடிகை கோமதிப்பிரியாவும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதுபோல அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக நடிகை ராதா இருக்கிறார். அவரோடு விஜய் நடித்த கில்லி படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்த நடிகர் ஆஷித் வித்யார்த் இருக்கிறார்.
அதிலும் கோமதி பிரியா அறிமுகம் ஆகும் காட்சியில் அவர் கையில் ஒரு கீரை கட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. கையில் கீரை கட்டு கொண்டு வரும் அவர் இதை கொடுத்துதான் என்னை வெல்கம் பண்ணுனாங்க என்று சொல்கிறார். அதற்கு நடுவர் அவரை பங்கமாக கலாய்க்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications