பாவாடை தாவணியில் வந்த நடிகர் கூல் சுரேஷ்.. கையில் அந்த போஸ்டர் வேற! என்ன ஆச்சு இவருக்கு?
சென்னை: காமெடி நடிகராகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கூல் சுரேஷ் தற்போது பாவாடை தாவணி போட்டு பெண் வேடத்தில் கன்னி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இது இனி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கூல் சுரேஷ் காமெடி நடிகராக பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரபலமடைந்தார். இவர் வெளியே இருக்கும் போதெல்லாம் ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும், இசை வெளியீட்டின் போதும் வித்தியாசமாக எதையாவது செய்து பெரிய அளவில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் அமைதியின் சொரூபமாக இருந்த கூல் சுரேஷ் சில இடங்களில் தன்னுடைய கருத்தை சுற்றி வளைத்து பேசி நான் ரொம்ப நல்ல பிள்ளைப்பா என்று பெயர் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் விசித்திராவோடு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பேசப்பட்டும் கொண்டிருந்தார்.
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உள்ளிருந்த அதே கூல் சுரேஷா இது என்று வியந்து பார்க்கும் அளவிற்கு மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷ் தன்னுடைய நண்பன் சந்தானத்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அதுவும் நான் உன்னை சந்திக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு கையில் மாலையோடு போன கூல் சுரேஷ் அந்த மாலையை என்னுடைய கழுத்தில் போடு என்று சொல்லி அதையே ஒரு போஸ்ட் போட்டு என்னுடைய நண்பன் எனக்கு கொடுத்த மரியாதை என்று சொல்ல, அது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வந்தது.

ஆனால் இந்த ரகசியத்தை சந்தானம் ஒரு நிகழ்ச்சியில் போட்டு உடைத்து விட்டார். நான் மட்டும் கூல் சுரேஷை நம்பி ஏமாறவில்லை. சிம்புவின் அப்பாவான டி ஆர் ராஜேந்திரனும் கூல் சுரேஷ் இடம் ஏமாந்து விட்டார் என்று அப்போது சந்தானம் கூறி இருந்தார். அதே நேரத்தில் கூல் சுரேஷ் எப்போ எது செய்யப் போகிறார் என்று யாராலும் கணிக்க முடியாது.
அந்த வகையில் தான் புது திரைப்படங்கள் வெளியாகும் போது வெந்து தணிந்தது காடு என்று சொல்லி குறிப்பிட்ட நடிகருக்கோ அல்லது படத்திற்கோ வணக்கத்தை போடு என்று தியேட்டர் வாசலில் நின்று கூவுவதுதான் கூல் சுரேஷின் வேலை. இந்த நிலையில் சமீபத்தில் கன்னி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது.
அதில் பெண் வேடம் அணிந்து சென்றுள்ள ஸ்கூல் சுரேஷ் கையில் கன்னி திரைப்படத்திற்கான போஸ்டரையும் வைத்தபடி பத்திரிகையாளர்கள் முன்பு நடந்து காட்டி இருக்கிறார். இந்த வீடியோஸ் இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications