6 மாசம் போலீஸ்கிட்ட ட்ரெய்னிங் எடுக்கணும்.. பிக்பாஸ்குள் நடக்கிறது இதுதான்.. புட்டு புட்டு வைத்த கூல் சுரேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் எலிமினேஷன் ஆன கூல் சுரேஷ் முதல் முறையாக பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால் முதலில் இதைதான் பண்ண வேண்டும் என்றும் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு வந்த வாய்ப்புகள் குறித்தும் கூல் சுரேஷ் பேசி இருக்கும் நிலையில் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் சமீப காலமாக இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானதும் இவரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் ஒரு வாரத்திலேயே வெளியே வந்து விடுவார் என்பது தான் பலருடைய கருத்தாக இருந்தது.

Cool Suresh is talking about the opportunities that have come to him after Bigg Boss

கூல் சுரேஷ் எந்த படம் வெளியானாலும் அந்தப் படத்தை திரையில் பார்த்துவிட்டு வெளியே வந்து "வெந்து தணிந்தது காடு.. (குறிப்பிட்ட)..... அந்த படத்திற்கு வணக்கத்தை போடு.." என்ற ஒரு வாசகத்தை முழக்கமிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அமைதியில் சொருவமாக மாறி இருந்தார்.

இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியே வந்து பிறகு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். அதாவது கூல் சுரேஷ் ஒரு நடிகனாக இருந்தாலும் வீட்டிற்குள் சுரேஷாக மட்டும் தான் இருக்கிறாராம். அவருடைய வீட்டிற்குள் போவதற்கு முன்பே வெளியே அவருடைய சினிமா நடிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு தான் உள்ளே போவாராம். தன்னுடைய வீட்டுக்குள் தன்னுடைய மனைவிக்கு கணவராகவும், குழந்தைகளுக்கு அப்பாவாக மட்டும் தான் இருப்பேன்.

அது போல தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருந்தேன். பிக் பாஸ்க்கு போறதுக்கு முதல் நாள் கமல்ஹாசன் என்னிடம் உள்ளே நீங்க சுரேஷ் ஆக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதைத்தான் என்னுடைய மனதில் வைத்திருந்தேன். பிக் பாஸ் வீட்டிற்குள் நான் கூல் சுரேஷ் ஆக போயிருந்தேன் என்றால் இப்போது வெளியே வந்திருக்க மாட்டேன். உள்ளே சுரேஷ் ஆக மட்டும் இருந்ததால் தான் இவ்வளவு சீக்கிரமாக வெளியே வந்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

(இதற்கு பலருடைய மனதில் தோன்றியிருக்கும் நீங்க வெளியே போக வேண்டும் என்று சுவர் ஏறி குதித்ததெல்லாம் மறந்து போய்விட்டதா என்றுஆனாலும் அதை மனதுக்குள்ளே வைத்துவிட்டு மீதம் கதையை படியுங்கள்...) அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை காரி துப்பி கண்டமேனிக்கு பேசிய கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக இருந்துவிட்டு கடந்த வாரத்தில் எலிமினேஷன் ஆகி வந்திருக்கிறார்.

Cool Suresh is talking about the opportunities that have come to him after Bigg Boss

இந்த நிலையில் இப்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசி இருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால் ஆறு மாதம் திருடன், ஏமாற்றுக்கார், மாத்தி மாத்தி பேசுறவங்களோடு நாம பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களோடு சேர்ந்து எப்படி அடுத்தவர்களை ஏமாற்றலாம் திருடலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஆறு மாதம் போலீசாருடன் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த மாதிரி திருட்டுத்தனம் செய்கிறவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இப்படி ட்ரெயினிங் எடுத்துட்டு உள்ளே போனால் நன்றாக விளையாடலாம். இப்படி நான் எந்த ட்ரெய்னிங்கும் எடுக்காமல் உள்ளே போனதால்தான் வெளியே வந்து விட்டேன்.

அதோடு எனக்கு குடும்பம் ஞாபகமாகவே இருந்துச்சு. நான் வெளியே வந்த பிறகு என்னுடைய குடும்பம் என்கிட்ட கோபப்பட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் தானே இருந்து இருக்கலாம் என்று, ஆனால் ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனாக நான் என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் தான் நான் போன நாளிலிருந்து எனக்கு தோனிட்டே இருந்துச்சு. அதுதான் நான் வெளியே வர காரணமாகவும் இருந்துச்சு, என்று அந்த பேட்டியில் கூல் சுரேஷ் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+