பிக் பாஸ் போனா விளங்காது.. அது ஒரு தரித்திரம்..! என்கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு! கூல் சுரேஷ் பேட்டி
சென்னை: நடிகர் கூல் சுரேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் யாருக்கும் சினிமா வாய்ப்பு வராது, அந்த நிகழ்ச்சி ஒரு தரித்திரம், நான் கமல்ஹாசனிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால் நான் எதற்காக கலந்து கொண்டேன் தெரியுமா? என்று அந்த நிகழ்ச்சியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரோல் ஆகி வருகிறது.
நடிகர் கூல் சுரேஷ் பல திரைப்படங்களில் காமெடியான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் சில வருடங்களாகவே படங்களை ரிவ்யூ செய்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். படம் வெளியாகும் போதெல்லாம் இவர் பேசும் டயலாக் ரசிகர்கள் மத்தியில் கலாய்க்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கூல் சுரேஷ் குறித்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் கண்டுகொள்ளாத கூல் சுரேஷ் மீடியாவில் எது ட்ரெண்டாக இருக்கிறதோ அதைப் பற்றி பேசிய மேலும் பரபரப்பு ஏற்படுத்துகிறார்.

கண்டுகொள்ளாத கூல் சுரேஷ்
அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது இவரா கூல் சுரேஷ் என்று சொல்வது போல அமைதியின் சிகரமாக மாறி இருந்தார். எந்த பிரச்சனை நடந்தாலும் இதனால் நமக்கு எதுவும் பிரச்சனை வந்து விடுமா? இதெல்லாம் நம்மிடம் யாராவது கேள்வி கேட்பார்களா? நம்முடைய குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள்? என்று பல்வேறு கேள்விகளுடனே அவரை சுற்றி பிரச்சனைகள் நடக்கும் போது அமைதியாகவே இருந்து வந்தார்.
கமல்ஹாசன் கேள்வி
இது குறித்து கமல்ஹாசன் கூட பல நேரங்களில் கேள்வி எழுப்பியிருக்கிறார். உங்கள் பக்கத்திலேயே ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை என்பதுதான் கமல்ஹாசனின் கேள்வியாக இருக்கும். அதற்கு கூல் சுரேஷ் இல்லை சார் நான் ஏதாவது சொல்லப்போக இவங்க பெரிய பஞ்சாயத்து பண்ணி இருக்காங்க, நான் வீட்டுக்கு போகனும் என்று ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
பிக் பாஸ் பற்றி கூல் சுரேஷ்
பிரதீப் உடன் கூல் சுரேஷுக்கு சண்டை நடந்தது கூட மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பேசும்போது பிக்பாஸ் நிகழ்ச்சி போன யாரும் உருப்பட்டது கிடையாது. அந்த நிகழ்ச்சி ஒரு தரித்திரம். அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களோ அல்லது ட்ரோல் செய்யப்பட்டவர்களோ யாராவது சினிமாவில் சாதித்தவர்கள் என்று உண்டா என்று கேட்டால் இல்லை.
100 நாள் வேலைவாய்ப்பு
அந்த நிகழ்ச்சியில் இருக்கும் காலத்தில் மட்டும்தான் மக்கள் மத்தியில் அவர்கள் பேசப்படுகிறார்கள். அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் யார் இருந்தா என்று தெரியாமல் போய்விடுகிறது. ஆனால் இவர்களை நம்பி சிலர் படங்கள் எடுக்கிறார்கள் அந்த படம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரையும் நீங்கள் படத்தில் வைக்காதீர்கள் அந்த படம் விளங்காது. நீங்க இப்ப கூட நினைக்கலாம் நீ இவனே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனவன் தானேனு.
வீடியோ ஆதாரம்
நான் அந்த நிகழ்ச்சிக்கு போனதற்கு காரணம் நூறு நாள் வேலை வாய்ப்பு. அந்த நிகழ்ச்சியில் எனக்கு நல்ல சம்பளம் தந்தாங்க இருக்க இடம் தந்தாங்க. 100 நாள் வேலை வாய்ப்புக்காக மட்டும் தான் அங்கு போனேன். வேற எந்த ஆதாயத்தையும் நான் எதிர்பார்க்கல. அதனால எனக்கு அது பெருசாக தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது கமல்ஹாசனிடம் நானே சொன்னேன் சார் என்னால இங்கு இருக்க முடியல, என்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்கன்னு சொன்னேன். அதற்கு கமல் சார் நான் வெளியே உன் குடும்பத்தை பார்த்துக்கிறேன் நீ இந்த நிகழ்ச்சியில் இருனு சொன்னாரு. அதற்கான வீடியோ ஆதாரம் என்கிட்ட இருக்கு என்று அந்த பேட்டியில் கூல் சுரேஷ் பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் ஆகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications