மகனால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஆட்டோக்காரர்.. 3.50 லட்சம் மதிப்புள்ள ஆட்டோவை வழங்கிய கூல் சுரேஷ்
சென்னை: நடிகர் கூல் சுரேஷ் தன்னிடம் உதவி கேட்ட ஆட்டோக்காரர் ஒருவருக்கு தன்னுடைய நற்பணி மன்றத்தின் சார்பாக ஆட்டோ வாங்கி கொடுத்திருக்கும் நிலையில் அது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில் இப்போது பல நடிகர்கள் தொடர்ச்சியாக தங்களால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தாங்கள் செய்யும் உதவிகளை இணையத்தில் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

இது ஒரு பக்கம் விமர்சனங்களை சந்தித்தாலும் மறுபக்கத்தில் பலராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது. நடிகர் லாரன்ஸ் தன்னால் முடிந்த அளவிற்கு பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து இப்போது அவர்கள் வேலையில் அமர்ந்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தன்னுடைய பணியினை செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் அவர் தான் செய்யும் உதவிகளை வீடியோவாக வெளியே வெளியிடும்போது அது அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு லாரன்ஸ் நான் உதவி செய்கிறேன் என்று விளம்பரப்படுத்துவதற்காக இந்த வீடியோக்களை வெளியிடவில்லை. என்னைப் போல பலர் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை பலருக்கும் தெரிய படுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா என்று பலரும் தொடர்ச்சியாக உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் கூல் சுரேஷ் இடம் பிடித்திருக்கிறார். கூல் சுரேஷ் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அதில் "வெந்து தணிந்தது காடு" என்ற ஒரு டயலாக்கை வைத்துக்கொண்டு அதோடு குறிப்பிட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லி அதற்கு வணக்கத்தை போடு என்று விளம்பரப்படுத்தி கொண்டிருப்பார்.
இது அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கும் கூல் சுரேஷ் இப்போது பிக் பஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மொத்தமாக மாறி இருக்கிறார். அதுவரைக்கும் தடுக்கிறது எல்லாம் கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றி இருந்தார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகனால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட கலீல் என்பவருக்கு 3.50 லட்சம் மதிப்புள்ள ஆட்டோவை தன்னுடைய நற்பணி மன்றம் மூலம் வாங்கி நடிகர் கூல் சுரேஷ் கொடுத்து இருக்கிறார்.
அதோடு அந்த ஆட்டோவை ஆட்டோக்காரரிடம் ஒப்படைத்ததும் ஆட்டோக்காரர் நான் உங்களை என்னுடைய ஆட்டோவில் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல அதற்கு முடியாது நீங்க தான் எல்லோரையும் ஆட்டோவில் கூட்டிட்டு போறீங்க. அதனால நான் உங்களை கொஞ்ச நேரம் கூட்டிட்டு போறேன் என்று ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அமர்ந்த கூல் சுரேஷ் ஆட்டோக்காரரை பின்னாடி உட்கார வைத்து பக்கத்திலேயே ஒரு ரவுண்டு அடித்து விட்டு இருக்கிறார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications