Coolie 4th day collection: எவ்வளவு கலாய்த்தாலும் பாக்ஸ் ஆபிஸ் கலக்கும் கூலி! 4வது நாள் வசூல் வேட்டை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 14ஆம் தேதி, வெளியான 'கூலி' திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது. படம் வெளியாகி நான்கு நாட்களில் உலக அளவில், ₹400 கோடிகளைத் தாண்டி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

கூலி ஒரு பான் இந்தியா படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையை நிறைவு செய்யும், காலகட்டத்தில் 'கூலி' திரைப்படம், வெளியானது. இவர் கடந்த, 1975-ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெளியான அதே நாளில் இப்போது ரஜினியின் 50வது படமான கூலி ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்தப் படத்தில், ரஜினியுடன், மலையாள திரையுலகில் இருந்து சௌபின் சாஹிர், கன்னட திரையுலகில் இருந்து உபேந்திரா, தெலுங்கு திரையுலகில் இருந்து நாகார்ஜுனா, பாலிவுட் திரையுலகில் இருந்து அமிர் கான் என, பான் இந்தியா அளவுக்கு பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். தமிழ் திரையுலகில் இருந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், காளி வெங்கட், உள்ளிட்ட, பலரும், நடித்திருந்தார்கள்.
வசூலில் வரலாறு
முதல் நாள் வசூல்: 'கூலி' திரைப்படம், முதல் நாளில், ₹151 கோடிகளை வசூல் செய்து தமிழ் திரையுலகில் ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக வரலாறு படைத்தது. கூலி படம், பான் இந்தியா அளவில், ஹிட் அடிக்கும் என்றும் ₹1,000 கோடிகளை வசூல் செய்யும் என்றும் பலரும், நினைத்திருந்தனர். ஆனால், கலவையான விமர்சனங்களுக்குப் பின்னர், ₹1,000 கோடிகள் வசூல் சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான்காவது நாள் வசூல்
படம் வெளியாகி, நேற்றுடன் அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகிறது. இந்த நான்கு நாட்களில், படத்தின் வசூல் உலக அளவில் கிட்டத்தட்ட ₹400 கோடிகளை வசூல் செய்துவிட்டது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே சுமார் ₹200 கோடிகள் முதல் ₹220 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டதாக, கூறப்படுகிறது. சாக்நிக் வலைத்தளம் தெரிவித்துள்ள தோராயக் கணக்குப்படி இந்தியாவில் படம் ₹194.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ வசூல் கணக்கை அறிவிக்கவில்லை. எப்படியும் படம் முதல் நான்கு நாட்களில் ₹400 கோடிகளில் இருந்து ₹410 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது. இந்தப் படம் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல்லாக மாறி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications