Coolie: பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினி! கூலி படத்தின் 25 நாள் வசூல் நிலவரம்.. கமலின் சாதனையை முறியடித்ததா?
சென்னை: தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் இடையில் நடக்கும் பாக்ஸ் ஆபிஸ் போட்டி நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் ரஜினியின் அறிமுகமே கமல் நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்தான். ஆரம்பத்தில் ரஜினி, கமலின் நண்பராகவோ அல்லது வில்லனாகவோ பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக நடிக்க முடிவு செய்தனர்.
இதில், ரஜினி பக்கா கமர்ஷியல் மசாலாப் படங்களில் நடித்து, வசூல் மன்னனாக மாறினார். ரஜினியின் வளர்ச்சி கமல்ஹாசனையே ஆச்சரியப்படுத்தியது. ரஜினி படங்களுக்குக் கிடைத்த அளவுக்கு வசூல் கமல் படங்களுக்குக் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ரஜினியின் சம்பளம் ₹70 கோடியாக இருந்தபோது கமலின் சம்பளம் ₹30 கோடியாகத்தான் இருந்தது. கமல்ஹாசனின் விக்ரம் படம்தான் ₹400 கோடி வசூலைத் தாண்டி, அவரது சம்பளத்தையும் உயர்த்தியது.

கூலி படத்தின் வசூல் வேட்டை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி பெரும் எதிர்பார்ப்புகளுடன் கலவையான விமர்சனங்களை பெற்றது. "ரஜினியை லோகேஷ் சரியாகப் பயன்படுத்தவில்லை" என்றும், "படத்தில் லாஜிக் மிஸ்டேக்குகள் அதிகம்" என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை.
வெளியான நான்கு நாட்களிலேயே படம் உலக அளவில் ₹400 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது, படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில், அதன் மொத்த வசூல் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
"கூலி படம் வெளியானது முதல் இதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பரவினாலும், படத்தின் வசூலை யாராலும் தடுக்க முடியவில்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, படம் உலக அளவில் ₹675 கோடி வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஜெயிலர் திரைப்படம் 25வது நாள் முடிந்ததும், கலாநிதி மாறன் அனைவருக்கும் பரிசளித்தார். கூலி படத்திற்கும் விரைவில் அப்படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்" என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.
கமலை முந்திய ரஜினி
கூலி திரைப்படம் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் வசூலித்துள்ளது. குறிப்பாக, வட அமெரிக்காவில் இப்படம் $6.8 மில்லியன் (சுமார் ₹56 கோடி) வசூலித்துள்ளது. இது கமல்ஹாசன் அங்கு வெளியான அவருடைய அனைத்துப் படங்களின் மொத்த வசூலை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்தப் பெரிய சாதனை, ரஜினிதான் வசூல் சக்கரவர்த்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
விக்ரம் படம் பெற்ற பெரிய வெற்றியைத் தொடர்ந்து, கூலி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனை, ரஜினி-கமல் இடையேயான போட்டி ரசிகர்களால் ஏற்படுத்தப்பட்டதுதான் என்ற கமலே சொன்னாலும், தொழில்முறையில் இந்த இருவரும் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் போட்டியாளர்களாகவே நீடிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications