Coolie OTT: கூலியை தியேட்டரில் பார்க்கலையா? ஓடிடியில் இந்த தளத்தில் இவ்ளோ சீக்கிரமாக வர போகுதாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், நேற்று உலகம் முழுவதும், திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக, இந்தப் படம், அடி வாங்கினாலும், வசூல் ரீதியாக, சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில், 'கூலி' படத்தின் ஓடிடி (Coolie OTT) ரிலீஸ் குறித்த தகவல்கள், வெளியாகத் தொடங்கியுள்ளன.

Coolie Rajinikanth Lokesh Kanagaraj

கூலி - வசூல் சாதனை

'கூலி' திரைப்படம், விமர்சன ரீதியாக, அடி வாங்கினாலும், வசூலில், படத்திற்கு, நல்ல வரவேற்புதான். 'ப்ரீ டிக்கெட் புக்கிங்கில்' ₹100 கோடிவரை வசூலித்துவிட்ட இந்தப் படம், முதல் நாளான நேற்று, இந்தியாவில் மட்டும், ₹65 கோடி வசூலித்ததாக, பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள், தெரிவிக்கின்றன.
அதேசமயம், போட்டிக்கு ரிலீஸான 'வார் 2'வும், ₹53 கோடிவரை வசூலித்துவிட்டதாக, கூறப்படுகிறது. எனவே, வரும் நாட்களில், 'கூலி'யை, 'வார் 2' முந்த, வாய்ப்புகள் அதிகம். இந்த நிலைமையெல்லாம், படக்குழுவுக்கு, கொஞ்சம் 'அப்செட்டைத்தான்', கொடுத்திருக்கும்.

கூலி ஓடிடி ரிலீஸ் விவரம்

பொதுவாக, ஒரு படம் வெளியாகி, நான்கு வாரங்கள் கழித்து, ஓடிடியில் ரிலீஸ் செய்யும் நடைமுறை, தமிழ்நாட்டில், இருக்கிறது. இப்போது, 'கூலி'க்கு, முதல் நாளே, எதிர்மறையான விமர்சனங்கள், வரத் தொடங்கியிருப்பதால், அடுத்த மாதமே, அமேசான் பிரைம் ஓடிடியில், படம், 'ஸ்ட்ரீம்' ஆக, வாய்ப்புகள் அதிகம், என்று, கருதப்படுகிறது. அக்டோபர் மாதம், வரவிருக்கும் தீபாவளிக்கு, 'கூலி' திரைப்படம், சன் டிவியில், சிறப்புத் திரைப்படமாக, ஒளிபரப்பாகவும், வாய்ப்புகள் அதிகம், என்று, கணிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் நிலை

'லியோ'க்கு பிறகு கோலிவுட்டின், இப்போதைய தலைமுறை இயக்குநர்களில், லோகேஷ் கனகராஜ், நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தை, விஜய்யை வைத்து, அவர் இயக்கிய 'லியோ' திரைப்படம், அசைத்து பார்த்தது. அதனை, ரஜினியை வைத்து இயக்கும் 'கூலி' படத்தில், சரி செய்துவிடலாம், என்று, அவர் நினைத்தார்.நம்பர் 1 இயக்குனர், பல ஸ்டார்கள், எல்லாத்துக்கும் மேலாக, சூப்பர் ஸ்டார், என, பிரமாண்ட கூட்டணியில் உருவான 'கூலி' படத்திற்கு, எக்கச்சக்க அளவு, 'ஹைப்' ஏற்றப்பட்டது.

ரசிகர்களின் விமர்சனம்:

ஆனால், படம் பார்த்த ரசிகர்கள், ரஜினியின் நடிப்பைக் கொண்டாடத்தான் செய்தார்கள். ஆனால், சிலர் படத்தை, 'கழுவி, கழுவி ஊற்றுகிறார்கள்'. பழைய கதையை, ரொம்பவே, பழைய பாணியில், திரைக்கதையாக, அமைத்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ், என்றும், 'கொஞ்சம்கூட, சுவாரஸ்யமே இல்லை', என்று, விமர்சித்து, தள்ளிவிட்டார்கள். மேலும், லோகேஷ் என்னும் பிம்பம், ஏறத்தாழ உடைந்துவிட்டது, என்றே, கூறுகிறார்கள்.

'கூலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும், வெளியாகவில்லை. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதால் 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளை இந்த படத்திற்கு கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. குடும்பமாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஏமாற்றம்தான்.

நடிகர் ரஜினிகாந்த் பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பல தியேட்டர்களில் 16, 15 வயது உள்ளவர்களையும் அனுமதிக்காததால் பெற்றோரும் நண்பர்களும் திரும்பி சென்று இருக்கின்றனர். இதனால் இந்த படம் ஓடிடிக்கு வரும் போது இன்னும் அதிக வரவேற்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+