Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்கிரீம் குத்தி சாப்பிடுறேன்னு திட்டுறாங்க.. ஆனால்! எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.. தம்பதி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில், "மனைவியின் குழந்தை தனத்தை ரசிப்பதாக? வெறுப்பதா? புலம்பி தவிக்கும் கணவர்கள் என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரதிவதனா மற்றும் பிரபாகரன் தம்பதி இணையத்தில் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்கள்.

ரதிவதனா அந்த நிகழ்ச்சியில் பேசும் போது ஐஸ்கிரீமை குத்தி குத்தி மெல்ட் பண்ணி சாப்பிடுவேன் என்று சொன்னது சமூக வலைத்தளத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. நிகழ்ச்சியில் எல்லா பெண்களுமே தங்களுக்குள் இருக்கும் குழந்தைதனத்தை வெளிக்காட்டி இருந்தனர். ஒரு பெண் எனக்கு பெட்ரோல் வாசனை தான் ரொம்ப பிடிக்கும், அதனால் என்னுடைய கணவரிடம் பெட்ரோல் வாங்கிட்டு வர சொல்லி அதை முகர்ந்து பார்ப்பேன் என்று சொல்லி இருந்தார்.

television zee tamil tamizha tamizha show

இன்னொரு பெண் நான் காலண்டர் பேப்பரை எடுத்து சாப்பிடுவேன் என்று சொல்லி இருந்தார். இப்படி வித்தியாசமான பல பழக்க வழக்கங்கள் மனிதருக்குள் இருக்கும் விஷயம் இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கும் தெரிய வந்தது. அதிலும் எல்லாரையும் விட ஐஸ் கிரீம் சூடு பண்ணி சாப்பிடுவேன் என்று ரதிவதனா பேசியது பலரையும் பேச வைத்ததற்கு காரணம் அவர் கொடுத்த எக்ஸ்பிரஷனாக கூட இருக்கலாம்.

அதுபோல அந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண் எனக்கு சென்டிமென்ட் பாட்டு கேட்டால் எப்போதும் அழுகை வந்துவிடும் என்று சிணுங்கிய படி சொல்லி இருந்ததும் பலரால் கலாய்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த தம்பதி தற்போது ட்ரெண்டிங் கப்பிள்ஸ்ஸாக மாறிவிட்டார்கள். பல youtube சேனல்களும் இவர்களை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சமூக வலைதளத்தில் ஆக்டிவான ஜோடி தான்.

இன்ஸ்டாகிராமில் அதிகமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் தான் இவர்களுக்கு தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொள்வதற்காக ஜீ தமிழில் இருந்து இவர்களிடம் பேசியபோது அந்த நேரத்தில் இவர்கள் ஊரில் இருந்தார்களாம். அதாவது இவர்களுடைய சொந்த ஊர் சிலோன் தானாம். அதனால்தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இப்போது இவர்கள் பிரபலமானதை தொடர்ந்து அந்தப் பெண் தான் எதற்காக ஐஸ்கிரீம் சூடு பண்ணி சாப்பிடுவேன் என்று பேசி இருக்கிறார். அதாவது எனக்கு சளி பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் நான் ஐஸ்கிரீமை மெல்ட் ஆகுற வரைக்கும் காத்திருந்து சாப்பிடுவேன். வீட்டில் என்றால் மெல்ட் ஆகுற வரைக்கும் காத்திருக்கலாம், ஆனால் ஹோட்டலில் அப்படி செய்ய முடியாது.

எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட பிடிக்கும் என்பதால் ஹோட்டலில் சுடுதண்ணி வாங்கி அதை மெல்ட் செய்து சாப்பிடுவேன். அதற்காக அதை சூடு செய்து சாப்பிடுவது என்று இல்லை. அதை எல்லோரும் தப்பா புரிந்து கொண்டார்கள். தமிழா தமிழா நிகழ்ச்சி ரொம்ப நேரம் நடைபெற்றது ஆனால் அதில் பேசியதில் பாதியை மட்டும் தானே ஒளிபரப்பு செய்தார்கள். அதில் நான் பேசிய பல விஷயங்கள் வராமல் போய்விட்டது.

television zee tamil tamizha tamizha show

அதனால் பார்க்கிறவர்கள் தப்பாக புரிந்து கொண்டார்கள். அதுபோல சிலோனில் எங்களுடைய குடும்பம் கூட்டு குடும்பம். நான் வீட்டில் ஒரே செல்ல பொண்ணு. அதனால் ரொம்பவும் செல்லமாக வளர்த்து விட்டார்கள். நான் நடந்து கொள்ளும் விதம் குழந்தைத்தனமாக இருக்கிறது என்று யாரும் எங்கள் வீட்டில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்னுடைய வீட்டில் நான் எல்லாமாக இருக்கிறேன். எனக்கு கோபம் வரும், அழுகை வரும் எல்லாமே நான் செய்வேன்.

அதுபோல குடும்பத்தை விட்டு பிரிந்து வரும்போது எனக்கு சென்டிமென்ட் பாட்டுகள் கேட்டால் உண்மையில் அழுகை வரும். இணையத்தில் என்னை பற்றி பல நெகடிவ் கமெண்ட்கள் வருகிறது. அதையெல்லாம் நான் கண்டு கொள்வதே கிடையாது. அதை பார்த்து எனக்கு வருத்தமும் இல்லை. என்னுடைய கணவருக்கு நான் இப்படி இருக்கிறது தான் பிடித்திருக்கிறது. அதனால் நான் அப்படியே இருக்கிறேன்.

ஆனால் ஒரே ஒரு கமெண்ட் மட்டும் என்னுடைய மனதை ரொம்ப நெகிழ வைத்தது. அதாவது ஒரு கமெண்டில், "செல்லம் நீ கவலைப்படாத உனக்கு ரெண்டு கிலோ ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்து மெல்ட் பண்ணி தாரேன் நீ சாப்பிடு. ஏன்னா எனக்கும் ஐஸ்கிரீம் மெல்ட் பண்ணி சாப்பிடுவது பிடிக்கும்னு" அந்த கமெண்டில் சொல்லி இருந்தாங்க. எனக்கு அன்னைக்கு முழுக்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அவ்வளவுதான் வாழ்க்கை... சந்தோஷமா எது பிடிக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், என்று ரதிவதனா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+