பேருக்குதான் காங். விசுவாசிகள்.. ஆனால்! ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த கார்த்திகேயன் சொன்னது இதுதான்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் (SIT) தலைவர் டி.ஆர். கார்த்திகேயன், விசாரணையின்போது ஏற்பட்ட சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, 'தி ஹன்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்' (the hunt rajiv gandhi assassination case) என்ற ஓடிடி தொடர் சமீபத்தில் வெளியானது.
1991ல் ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் பெரும் பொறுப்பை டி.ஆர். கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

பிரசார் பாரதிக்கு அளித்த ஒரு பழைய பேட்டியில், கார்த்திகேயன் தனது விசாரணையில் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் "தலையீடு" என்று தெரிவித்தார். "விசாரணையை திசை திருப்பவும், கையாளவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் எந்த அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்று நான் தெளிவாகக் கூறினேன். ராஜீவ் காந்தியைக் கொன்றது யார் என்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர், ஆனால் அதே நேரத்தில், அவர்கள் சில எதிரிகளை சிக்க வைக்கவும் விரும்பினர்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வர அனைவரும் ஆவலுடன் இருப்பார்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், ராஜீவ் காந்தியின் விசுவாசிகள் என்று கூறிக்கொண்டவர்கள்கூட எதிர்க்கட்சித் தலைவர்களை சிக்க வைக்கவே அதிக ஆர்வம் காட்டினர் என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தது," என்றும் கார்த்திகேயன் கூறியிருந்தார்.
பின்னர் மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திகேயன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்தது குறித்து பெருமிதம் தெரிவித்தார். வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் மூலமே இது சாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். கென்னடி கொலை வழக்கு போல ஆளுக்கு ஒரு யூகங்களுக்கு வருங்காலம் போகக்கூடாது. எனவே வலுவான சாட்சிகளை கொண்டு, ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கார்த்திகேயன் பேசுவதை போல ஒரு காட்சி வெப் சீரிசில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவைச் சேர்ந்த நாகேஷ் குகுனூர் இயக்கிய 'தி ஹன்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்' தொடரில் அமித் சியால் டி.ஆர். கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் சிரத்தை எடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சித்தரித்த விதம் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. பிரபாகரன் அறிமுகமாகும் காட்சியிலேயே அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக காட்டியது சரியில்லை, இது சீமான் சொல்வதை வைத்து கேலி செய்வதை போல உள்ளது என்ற விமர்சனம் ஒரு தரப்பால் முன் வைக்கப்பட்டாலும், இரு தரப்பு வலிகளையும் சமமாக பதிவு செய்துள்ளது இந்த சீரிஸ் என்ற பாராட்டையும் பார்க்க முடிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications