பிரைன் டியூமர் 4வது ஸ்டேஜ்.. மகளுக்காக தந்தை செய்த செயல்.. அதிலும் “அந்த” வார்த்தை செம..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் நிகழ்ச்சியில் சந்துரு என்ற போட்டியாளர் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய டான்ஸை பார்த்து சினேகா வியந்து போய் சந்துருவிடம் மேடைக்கே வந்து பேசுகிறார். அப்போது தான் சந்துருவின் மனைவி வந்து அவருக்கு புற்றுநோய் பாதித்து நான்காவது ஸ்டேஜில் இருக்கிறார். அவர் சிகிச்சையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் எதற்காக கலந்து கொண்டார் என்று கண்கலங்க பேசி இருக்கிறார்.

நம்மில் பலருக்கும் நமக்கு தான் கஷ்டம், நாம் தான் இந்த உலகத்தில் எல்லாரையும் விடவும் அதிக கஷ்டப்படுறோம் என்ற ஒரு மனநிலை இருக்கும். ஆனால் நம்மை விட கஷ்டப்படுபவர்கள் இன்னும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை பார்க்கும் போது நம்மை வியக்க வைத்து விடுகிறார்கள். அதுபோலத்தான் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்ட சந்துரு பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பல திறமையானவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தி இருக்கிறது. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு இந்த மேடை பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுவும் இன்று இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

புதிய ப்ரோமோ

அது குறித்த ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது வெளியான ப்ரோமோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறது. அந்த ப்ரோமோவில் கலந்துகொண்ட போட்டியாளரின் பெயர் சந்துரு. அவரை பார்க்கும்போது அவருடைய வயது 35 வயதுக்குள் உள்ளே தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

மனைவி சொன்ன வார்த்தை

ஆனால் அவர் தலையில் முடி இல்லாமல் தலையில் ஒரு தலைப்பாகை கட்டிக்கொண்டு டான்ஸ் ஆட வந்திருக்கிறார். அவர் மேடையில் நிற்கும் போது நடுவராக இருக்கும் சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் வரலட்சுமி மூன்று பேரும் வந்திருக்கிறார்கள். அப்போது சந்துருவின் மனைவியை கூப்பிடுகிறார்கள். சந்துருவின் மனைவி வந்து சொன்ன விஷயம் தான் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

புற்றுநோயின் நான்காவது ஸ்டேஜ்

அதாவது சந்துருவிற்கு பிரைன் டியூமர் கன்ஃபார்ம் ஆகிவிட்டதாம். அதுவும் நான்காவது ஸ்டேஜில் சந்துரு இருக்கிறாராம். இப்போது அவருக்கு கீமோதெரபி ட்ரீட்மென்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இந்த ஹெல்த் கண்டிஷனில் கண்டிப்பா நீங்க பண்ணனுமா என்று சினேகா கேட்க, அதற்கு சந்துரு ஆமாம் நமக்கு பிடித்த வேலையை நாம பண்ணினாலே எல்லாம் சீக்கிரமா சரியாகிவிடும் என்று கண்கலங்க சொல்லி இருக்கிறார்.

தன்னம்பிக்கை சூப்பர்

அப்போது பாபா பாஸ்கர் இங்க டான்ஸ் ஆடுனா ஒருத்தனுக்கு குணம் ஆகுதுன்னா நீ கண்டிப்பா ஆடுடா என்று சொல்கிறார். அதற்கு பிறகு சந்துரு டான்ஸ் ஆடி முடிக்கிறார். அதைத்தொடர்ந்து பேசுகையில் இந்த காம்படிஷனை நான் அட்டென்ட் பண்ணுவதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழந்தை தான். பியூச்சர்ல எங்க அப்பா இவ்வளவு பெரிய விஷயத்தை உடைத்து வந்து இருக்காங்க என்று என் பொண்ணு சொல்லுவா. அதுக்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

வாழ்த்துக்கள் சந்துரு

சந்துருவின் டான்ஸை பார்த்ததும் பாபா மாஸ்டர் உடன் சேர்ந்து மொத்த அரங்கத்தில் இருந்தவர்களும் அந்த மேடையை தொட்டு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். இதை பார்க்கும் பலரும் சந்துரு முழு உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர வேண்டும் என்று கடவுளை வேண்டி வருகிறார்கள். சந்துரு முழு ஆரோக்கியத்துடன் திரும்ப வந்து அவருடைய மகளுடன் சந்தோஷமாக வாழ நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம். "உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் சந்துரு."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+