Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளருக்கு சொத்து எழுதி கொடுத்த வரலட்சுமி.. சினேகா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பஞ்சமிக்கு நடிகை சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அதோடு ஜீ தமிழ் பஞ்சமிக்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். திறமை இருக்கும் சாமானியரும் சாதிக்க வேண்டும் என்று ஜீ தமிழ் சேனல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் ஒன்று.

Zee Tamil Dance Jodi Dance

இந்த நிகழ்ச்சியில் ரீலோடட் மூன்றாவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. நாளை இந்த நிகழ்ச்சிக்கான கிராண்ட் பினாலே நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் பினாலேவில் இருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பஞ்சமிக்கு ஜீ தமிழ் குழுவினர் இன்பஅதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

பஞ்சமிக்கு 15 வயது இருக்கும் போது அவருடைய தந்தை இறந்து விட்டராம். அவருடைய உறவினர்கள் ஒருவரை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இப்போது பஞ்சமிக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் செய்து பிறந்திருக்கின்றனர். ஆனாலும் தனக்கு டான்ஸ் ஆடும் திறமை இருப்பதால் தன்னுடைய கணவரின் ஒத்துழைப்போடு பஞ்சமி ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதல் வாரமே அனைவருடைய அனுதாபம் மற்றும் எதிர்பார்ப்பையும் சம்பாதித்து விட்டார். ஒவ்வொரு வாரமும் தன்னுடைய தனித்திறமையால் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் பஞ்சமிக்கு வரலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிக சப்போர்ட் செய்து கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் பஞ்சமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து அவருக்காக குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டனர்.

அது போல பஞ்சமி என்னுடைய குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார் என்று வரலட்சுமி சொல்லியிருந்தார். நடிகர் சூரி தான் நடித்த மாமன் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பஞ்சமி பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார். அதோடு பஞ்சமியின் குழந்தைகளுக்கு நடிகர் சூரியின் செலவில் காதுகுத்து பங்க்ஷன் நடத்தப்பட்டது. அதில் ஒரு குழந்தைக்கு சூரியின் மடியில் வைத்து தான் காது குத்தப்பட்டு இருந்தது.

Zee Tamil Dance Jodi Dance

அதுமட்டுமல்லாமல் பாபா மாஸ்டரும் ஆரம்பத்தில் இருந்து பஞ்சமிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிராண்ட் பினாலேவில் பஞ்சமி டான்ஸ் ஆடி முடித்திருக்கிறார். அப்போது நடிகை சினேகா தாம்பூலத்தில் சீர்வரிசை கொடுத்து உங்களுக்காக நான் சீர்வரிசை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன் இப்போ ஒரு சகோதரியாக நான் உங்களுக்கு சீர்வரிசை கொடுக்கிறேன் என்று கொடுத்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகை வரலட்சுமி ஒரு பத்திரத்தை கொடுத்திருந்தார். அதிலா பஞ்சமி பெயரில் நிலம் பதியப்பட்டு இருப்பதாக இருந்தது.

இந்த இன்ப அதிர்ச்சியில் பஞ்சமி இருக்கும் போது ஜீ தமிழ் குழுவினர் பஞ்சமியிடம் ஃபோனில் பேசியிருந்தனர். அப்போது பஞ்சமி உங்களுடைய டான்ஸ் திறமையை இந்த மக்கள் பார்த்திருப்பார்கள் இனி உங்களுக்கு நடிப்பதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்கிறோம். நீங்கள் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கப் போகிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே பாபா பாஸ்கர் கதாநாயகிகள் பயன்படுத்தும் கண்ணாடி ஒன்றை பஞ்சமிக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் பல போட்டியாளர்கள் புகழ் உச்சத்தில் வலம் வருகின்றனர். ஆனால் பஞ்சமிக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் இப்போது அவருக்கு அதிகமான மக்களின் அன்பு மற்றும் பரிசு கிடைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+