சொந்த குடும்பத்தினரே என்னை அப்யூஸ் பண்ணி.. கதறி அழுத கெமி.. வரலட்சுமி சொன்ன அதிர்ச்சி விஷயம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் போட்டியாளராக இருக்கும் கெமி தன்னுடைய சொந்த குடும்பத்தினரே தன்னை அப்யூஸ் செய்ததாக கதறி அழுதார். அதை தொடர்ந்து வரலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் சொல்லி இருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை பலரும் இந்த தொந்தரவுகளில் சிக்கி வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அதை தைரியமாக சொல்லி வருகிறார்கள்.

கெமி சொன்ன தகவல்
அதிலும் நடிகைகள் பலர் தங்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கெமி சொன்ன தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கெமியை ஏற்கனவே பல சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம்.
குக் வித் கோமாளி பிரபலம்
அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். அதுபோல இப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய டான்ஸ் திறமையை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். இவருக்கு இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த வார ரவுண்ட்
கடந்த வாரத்தில் கூட மணிமேகலையை தூக்கி சுத்தி பாடாய் படுத்து எடுத்திருந்தார். கட்டிப்புடி கட்டிபுடிடா பாடலுக்கு மணிமேகலையோடு கெமி போட்ட டான்ஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ரெட்ரோ ரவுண்ட் நடைபெறுகிறது. இதில் கெமியும் அவருடன் ஜோடி டான்ஸ் ஆடும் போட்டியாளரும் சேர்ந்து இளமை இதோ இதோ பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.
உடைந்து போன கெமி
பாடல் முடிந்ததும் கெமியிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கெமி இதுவரைக்கும் எல்லோரையும் சிரிக்க வச்சு, சிரிச்சி தான் பார்த்திருக்கிறோம். ஆனால் கெமி உடைந்து போன தருணங்கள் உண்டா என்று கேட்க, அதற்கு அது கண்டிப்பா உண்டு. எல்லோருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு திருப்பம் ஏற்படும் போது அவருடைய உறவினர்கள் தான் துணையாக இருப்பார்கள். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கவில்லை.
உறவினர்கள் செய்த செயல்
நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்னுடைய உறவுகள் யாரும் எனக்கு உதவவில்லை. என்னுடைய உறவினர்களே என்னை அப்யூஸ் செய்திருக்கிறார்கள், கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்று கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது அதை பார்த்த வரலட்சுமி, ரவீனா உட்பட பலரும் அழுதிருந்தார்கள்.
வரலட்சுமி சொன்ன சம்பவம்
பிறகு வரலட்சுமி பேசுகையில் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பிங்க என்று எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய அப்பாவும் அம்மாவும் வேலை வேலை என்று பிசியாக இருந்தாங்க. அதனால என்னை சொந்தக்காரங்க வீட்டில் விட்டு வளர்த்தாங்க. அப்படி சொந்தக்காரங்க வீட்டில் இருக்கும்போது ஐந்து ஆறு பேர் என்னை அப்யூஸ் செய்திருக்கிறார்கள்.
வரலட்சுமியின் வேண்டுகோள்
என்னுடைய மார்பகத்தில் கைகளை வைத்து... என சொல்லிக் கொண்டிருக்கும்போதே வரலட்சுமி கதறி அழுது இருக்கிறார். பிறகு நான் எல்லா பெற்றோர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுடைய குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுங்க என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications