Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dance Jodi dance reloaded 3: டான்ஸ் ஜோடி டான்ஸ் வின்னர் இவர் தான்! பரிசு தொகை இத்தனை லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று (ஜூலை 20ஆம் தேதி) பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கின்றனர். அவர்களில் யார் டைட்டில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனாலையே புதியதாக பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கான ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

Zee Tamil Dance Jodi Dance

பைனல் போட்டியாளர்கள்

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் இப்போது இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கின்றனர். அதில் தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா - கங்கனா, திலீப்- மெர்சீனா போன்ற ஐந்து ஜோடிகள் தான் இறுதி கட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் 3 நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெற்றி பெற்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் பினாலேவில் அனைவரையும் மிரளவைத்த நிதின் தான் ஜெயித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு 10 லட்சம் பரிசு தொகை கிடைக்கிறது. ஏற்கனவே சில ப்ரோமோ வெளியானது. அதில் நிதினிடம், "நீ டைட்டில் ஜெயித்து 10 லட்சம் வாங்கிவிட்டால் என்ன செய்வாய்?" என்று தொகுப்பாளர் விஜய், மணிமேகலை கேட்டிருந்தனர்.

டைட்டில் வின்னர் இவர்தான்

அதற்கு நிதின் "என்னுடைய அப்பாவுக்கு கிட்னி ஆபரேஷன் பண்ணுவேன். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். காசு இல்லாததால் கிட்னி ஆபரேஷன் செய்வது மிஸ் ஆகிவிட்டது. நான் ஜெயித்து அந்தப் பணம் எனக்கு கிடைத்தால் அப்பாவுக்கு ஆபரேஷன் செய்வேன்" என்று நிதின் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து நடிகை சினேகா மேடைக்கு வந்து "அப்பாவுக்கு ஆபரேஷன் செய்ய இரண்டு மருத்துவமனையில் பேசி இருக்கிறேன். கிட்னி கிடைத்த உடனே அப்பாவுக்கு ஆபரேஷன் செய்வோம். செலவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று சொல்லி இருந்தார்.

Zee Tamil Dance Jodi Dance

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் டைட்டில் வின்னர்

இதனால் எமோஷனலான நிதின் கண்ணீர் மல்க சினேகாவை கட்டி அணைத்த ப்ரோமோ இணையத்தில் வைரலானது. ஆனால் இப்போது அவர் டைட்டிலை வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அவருக்கு முழுமையாக 10 லட்சம் பணமும் கிடைக்கப் போகிறது. நிதின் வாழ்க்கையில் அடுத்தகட்ட வெற்றிக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

பஞ்சமிக்கு கிடைத்த உதவி

அதுபோல ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பலருடைய கவனத்தை ஈர்த்த பஞ்சமிக்கும் கிராண்ட் பினாலே மேடையில் பல உதவிகள் கிடைத்திருக்கிறது. இவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு சமமான பரிசுகள் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகை சினேகா பஞ்சமியின் மகன்களுக்கு சீர்வரிசை கொடுத்திருக்கிறார். அதேபோல நடுவராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் பஞ்சமிக்கு சொத்து எழுதி கொடுத்து இருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் பஞ்சமிக்கு சீரியலில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படியாக கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இப்போது தொலைக்காட்சியில் பலரையும் ஃபீல் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+