டான்ஸ் ஜோடி டான்ஸில் இந்த வாரம் காத்திருக்கும் ட்ரீட்.. மாறுபட்ட போட்டிகளத்தில் நடன மேடை
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் வேற மாதிரி ரவுண்டு தொடங்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 10 போட்டியாளர்கள் 10 பிரபலங்களுடன் இணைந்து நடனமாடி வருகின்றனர். ஆர்.ஜே விஜய் மற்றும் மணிமேகலை ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

பக்தி பரவச சுற்று
ஆரம்பம் முதலே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது, கடந்த வாரம் பக்தி பரவச சுற்று நடைபெற்றது. போட்டியாளர்கள் கடவுள் வேடமணிந்து ஆன்மீக பாடல்களுக்கு நடனத்தால் பிரம்மிக்க வைத்தனர். அப்போது பார்வையாளர்களாக இருந்தவர்கள் மற்றும் நிகழ்ச்சியை டிவியில் பார்த்தவர்கள் பலரும் வியந்து போயிருந்தனர். பக்தி பாடல்களுக்கு இப்படி டான்ஸ் ஆட முடியுமா என்று ரசிகர்கள் இல்லை வியக்க வைத்திருந்தார்கள்.
இந்த வார ரவுண்ட்
இதனை தொடர்ந்து இந்த வாரம் இது வேற மாதிரி ரவுண்ட் ஒளிபரப்பாக உள்ளது, அதாவது ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதமான பாடல்களை தேர்வு செய்து நடனமாட உள்ளனர். இதனால் இந்த வார டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி அனைத்தும் கலந்த அதிரடி ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பஞ்சமிக்கு குத்து பாடல்கள் தான் டான்ஸ் ஆட வரும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் அவர் இந்த வாரம் மைக்கேல் ஜாக்சனாக மாறி செம ஆட்டம் போட்டு இருக்கிறார்.
பஞ்சமியின் டான்ஸ்
பஞ்சமியின் டான்ஸை பார்த்து நடிகை சினேகா மற்றும் வரலட்சுமி இருவரும் வாயில் கை வைத்து அசந்து போயிருக்கிறார்கள். பாபா பாஸ்கர் இதுதான் தரமான குத்து ரவுண்டு என்று பாராட்டி இருக்கிறார். அதுபோல போட்டியாளர்கள் பலரும் வானத்தில் பறப்பது போன்றும், அந்தப் பக்கம் இந்த பக்கம் துதிப்பது போன்றும் பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறார்கள். எனவே டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications