சாண்டி மாஸ்டர் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? பிறந்த நாளில் குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென கலந்து கொண்ட அந்த குட்டி லாலா இப்போ ஐந்தாவது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சாண்டி மாஸ்டரின் மனைவி தன்னுடைய குழந்தை பற்றி உருக்கமான பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.

சாண்டியை பலருக்கும் மாஸ்டராக தெரிந்திருந்தாலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இவர் முதல் முறையாக 2005ஆம் ஆண்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் ஒன்றில் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
அதற்கு பிறகு நடன நிகழ்ச்சிகளில் பலவற்றில் நடுவராக களம் இறங்கி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.டான்ஸ் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்திருந்த இவருக்கு டான்ஸ் மூலமாக சினிமா துறையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவனுக்கு தண்ணில கண்டம் என்னும் திரைப்படத்தில் முதல்முறையாக நடிகராகவும் நடித்திருக்கிறார்.
அதற்கு பிறகு தான் 2019 ஆம் ஆண்டில் பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் வாய்ப்பு கிடைத்தது .இந்த பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று பலர் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி இருந்தாலும் சிலரின் வாழ்க்கை டோட்டலாக மாறிவிட்டது .அதுபோலத்தான் சாண்டிக்கும் வாழ்க்கை நன்றாக மாறி இருக்கிறது .தொடர்ந்து பல படங்களில் நடன மாஸ்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
என்னதான் வெளி உலகத்தில் இவர் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருடைய மனைவியான காஜல் பசுபதிக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றிருந்தாலும் அதற்குப் பிறகு சில்வியா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக இவர்களுக்கு லாலா என்னும் பெண் குழந்தையும் இருக்கிறது .சாண்டியை போலவே பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் லாலா அந்த வீட்டிற்குள் சென்று அனைவரையும் அசத்திவிட்டார் .இவர்களின் பாசத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் இப்ப வரைக்கும் கமெண்ட்களில் சாண்டியிடம் லாலாவை பற்றி தான் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சாண்டி மாஸ்டரின் மகளின் பிறந்த நாளான இன்று குடும்பத்தோடு கேக் வெட்டி மகிழ்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை சாண்டி மாஸ்டரின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கூடவே என் லிட்டில் மோனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஐந்து வயதாகி விட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. எனக்கு தாய்மை என்ற பரிசை தந்ததற்கு நன்றி என்று தன்னுடைய பாசத்தை காட்டி, குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications