இன்ஸ்டாகிராமில் மாற்றி யோசித்த தர்ஷா குப்தா! இப்போ ஒரு மாதத்திற்கு ₹3.5 லட்சம் வருமானம்! கலக்குறாங்க!
சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் தர்ஷா குப்தா. ட்ரெடிஷனல் போட்டோஷூட் மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். அவர், தற்போது தனிப்பட்ட சப்ஸ்கிரிப்சன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய முயற்சி, அவருக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.

சமூக ஊடகங்களின் சாதனை
சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் தர்ஷா குப்தா தெரிந்து இருக்கும். கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் எப்படி நடிகை ரம்யா பாண்டியன் ஃபோட்டோ ஷூட் மூலம் பிரபலம் அடைந்தாரோ அதுபோலத்தான் தர்ஷா குப்தாகவும் சரியாக ஐந்து மணிக்கு போஸ்ட் போட்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்து வந்தார். நாள் தவறினாலும் தர்ஷாவிடம் இருந்து வரும் போஸ்ட் தவறவில்லை என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு கமாண்டுகளை அள்ளிக் கொடுத்து வந்தனர்.
தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பயணத்தை ஒரு சாதாரண மாடலாகத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஃபேஷன், டிரெண்டி உடைகள் மற்றும் பிரபலமான போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார். தனது ஸ்டைலிஷ் தோற்றத்தால் அதிக ரசிகர் பட்டாளத்தை விரைவாக உருவாக்கினார்.
இன்ஸ்டாகிராமில் அவரது பக்கம், புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் மூலம் ரசிகர்களை எவ்வாறு ஈர்க்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது ஒவ்வொரு பதிவும் விரைவாக வைரலாகி, லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைகிறது.
சினிமா மற்றும் பிக் பாஸ் பயணம்
ஆரம்பத்தில் தர்ஷா ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் தான் கிராம பெண்ணாக நடித்திருந்தார். இந்த சீரியலில் அவர் இரண்டாவது கேரக்டரில் நடித்து வந்தார். அந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பே கிடைத்தது.

அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் தர்ஷவால் சில வாரங்கள் கூட அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடிக்க முடியவில்லை. அது தர்ஷாவை அதிகமாக வருத்தமடைய செய்தது. தர்ஷா தன்னை எவிக்ஷன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பேசி இருந்தார். அதோடு சௌந்தர்யா போன்ற போட்டியாளர்கள் பிஆர் வைத்து ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்படுவதாக தர்ஷா பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது.
வருமானம் சொல்லும் வெற்றி
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான தகவலின்படி, இன்ஸ்டாகிராமில் ஒரு சப்ஸ்கிரிப்சனுக்கு ₹499 வீதம் வசூலிக்கும் தர்ஷா குப்தா, மொத்தம் 759 சப்ஸ்கிரைபர்கள் மூலம் ஒரு மாதத்திற்கு மட்டும் ₹3,50,000 வருமானத்தை ஈட்டுகிறார். இது சமூக ஊடகங்களில் அவரது செல்வாக்கு மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு ஒரு சான்றாக உள்ளது. தனது கடின உழைப்பு மற்றும் திறமையால், தர்ஷா குப்தா டிஜிட்டல் உலகத்தில் மட்டுமின்றி, கலை உலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications