டிடி வீட்டில் சிம்பிளாக நடந்த கல்யாணம் – தம்பியின் திருமணத்தை பகிர்ந்த அக்கா.. பொண்ணு யாருன்னு பாருங்க
சென்னை: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி வீட்டில் சமீபத்தில் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது. டிடியின் தம்பி தர்ஷனின் திருமணம், மிக எளிமையான முறையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிடி மற்றும் அவரது அக்கா பிரியதர்ஷினி இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

டிடியின் மனதார வாழ்த்து
திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "Our younger brother got married this morning in an intimate wedding ceremony. Please shower your blessings to Dharshan and Ajar. So happy for you our gorgeous Ajar. It's our pleasure to welcome you and embrace your beautiful family from Kyrgyzstan into ours" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம், தர்ஷன் வாழ்க்கை துணை அஜார் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச கலாச்சார இணைப்புடன் அமைந்த இந்த திருமணம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எளிமை தான் அழகு
திருமணம் எந்தவிதமான பிரமாண்ட விளம்பரங்களும் இல்லாமல், எளிமையாக நடைபெற்றுள்ளது. இதுவே டிடி குடும்பத்தின் தனித்துவம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் என்றாலும் குடும்ப நிகழ்வுகளை தனிப்பட்ட முறையில் நடத்த விரும்பும் மனநிலையே இந்த திருமணத்திலும் வெளிப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

எவர்கிரீன் தொகுப்பாளினி
திவ்யதர்ஷினி (DD) தமிழ் தொலைக்காட்சி உலகில் தனி அடையாளம் கொண்டவர்.
காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல ரசிகர்களுக்கு பரீட்சையா மாணவர்தான் அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்கிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரது இயல்பான பேச்சு, நகைச்சுவை கலந்த உரையாடல், செலிப்ரிட்டிகளை சௌகரியமாக பேச வைக்கும் திறன் ஆகியவை அவரை முன்னணி தொகுப்பாளினியாக உயர்த்தின.
டிடியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் ரசிகர்கள் அதிகம் அறிந்தவர்களே. அவர் அவருடைய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்த விஷயத்தை டிடி ஒருபோதும் மறைத்ததில்லை. ஆனால் அதையும் வாழ்க்கையின் ஒரு அனுபவமாகவே அதை எடுத்துக் கொண்டு, தனது தொழிலிலும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அக்கா பிரியதர்ஷினி
டிடியின் அக்கா பிரியதர்ஷினி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பில் இயல்புத்தன்மை மற்றும் வலுவான கதாபாத்திர தேர்வுகள் மூலம், அவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
குடும்பம் தான் முன்னுரிமை
டிடி - பிரியதர்ஷினி சகோதரிகள் இருவருமே, தங்கள் தொழிலில் உச்சத்தில் இருந்தாலும், குடும்பத்தை எப்போதும் முதன்மையாக பார்க்கும் மனநிலையைக் கொண்டவர்கள். தம்பியின் திருமணத்தை இவ்வளவு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதே அதற்கான சிறந்த உதாரணம்.
டிடி வீட்டில் நடந்த இந்த எளிமையான திருமணம், "பிரபலம் என்பதற்காக பிரமாண்டம் தேவையில்லை" என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. தர்ஷன் - அஜார் தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டிடி எப்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் டிடியின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications