Kalyana Parisu Serial, Chadralekha Serial: செத்து செத்து விளையாடலாமா.. சன் டிவியின் 2 சீரியல்கள்!
சென்னை: சன் டிவியின் கல்யாண பரிசு, சந்திரலேகா சீரியல்களில் இரண்டு பெண்கள் செத்து விட்டது போல காதலன், கணவனிடம் நாடகமாடி வருகிறார்கள்.
சீரியல்களில் மட்டும் பெண்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வருகிறது? ஆனால், இதே சீரியல்கள்தான் படித்த பெண்கள் என்றாலும் வீட்டில் எதிர்த்து பேசாத மருமகளாக பதிவு செய்தும் வருகிறது.
உயிரோடு இருந்துகொண்டே செத்து விட்டது போன்ற நாடகத்தையும் பெண்களுக்கு சொல்லித் தந்து வரும் சீரியல்களை என்னவென்று சொல்ல?

கல்யாண பரிசு
சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலில் தன்னை விட்டு அசோக் வித்யாவை மணந்து கொண்டான் என்று, ஸ்வேதா இறந்து விட்டது போல நாடகமாடுகிறாள். அசோக் குற்ற உணர்ச்சியால் தவித்து போவான் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறாள். ஆனால், அசோக் ஸ்வதா நாடகமாடுகிறாள் என்கிற உண்மையை தெரிந்துகொண்டு உண்மையை கண்டுபிடிக்க தன்னால்தான் ஸ்வேதா இறந்து போனாள் என்கிற குற்ற உணர்ச்சியுடன் ஸ்வேதா வீட்டுக்கு வந்து தானும் இறந்து விட வேண்டும் என்று குடிக்க ஆரம்பிப்பது போல கதை நகர்கிறது. இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 11: 30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சந்திரலேகா சீரியல்
சன் டிவியில் சந்திரலேகா சீரியல் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் லேகா கணவன் சபரி இரண்டாவது கல்யாணம் செய்துகொள்வதைத் தடுக்கவும், அவனை அடையவும், சந்திரா மீது கொலைப்பழியை போடவும் தான் இறந்து விட்டது போல அம்மாவின் துணையோடு நாடகமாடுகிறாள்.

பெரிய சானலான
பெரிய சானலான சன் டிவி கூட தனது ஸ்லாட்களில் ஒரே மாதிரி கதை வருவதை கண்டுக்காமல் இருப்பது சரிதானா என்பது தெரியவில்லை. என்றாலும் கூட அது என்ன பெண்கள் செத்து விட்டது போல நாடகமாடுவது என்பது? நிஜத்துக்கு கொஞ்சமும் சாத்தியம் இல்லாததை கதையில் திணிப்பது? இப்படித்தான் சீரியல்களின் கதைகள், காட்சிகள் எல்லை மீறி போய்கொண்டு இருக்கின்றன.

சிறு பிள்ளை
செத்து செத்து விளையாடுவோமான்னு சிறு பிள்ளைத் தனமான விளையாட்டை கதையாக எடுத்து அத்தனை கோடி மக்கள் பார்க்கும் சானலில் சீரியலாக ஒளிபரப்புவது நெருடலாக இல்லை? பார்க்கும் மக்களுக்கு கூச்சமாக இருக்கிறது.ஒளிபரப்பும் உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications