விஜய் சொன்னதை அவரின் விர்ச்சுவல் வாரியர்ஸே கேட்க மாட்டாங்களா? தலைமை கட்டுப்பாடு கிடையாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளரின் லீடர்ஷிப் பற்றி விமர்சித்து இருந்தார். அதில் வாக்குறுதி கொடுத்துவிட்டு பிரச்சனை வந்ததும் எதிரணி மீது பழியை போட்டுவிட்டு ஓடுவது தலைமை இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார். அவர் எந்த அரசியல் தலைவரின் பெயரையும் அந்த நிகழ்ச்சியில் சொல்லவில்லை. ஆனாலும் அந்த வார்த்தைகள் முதல்வர் விஜய் உடன் இணைத்து சோசியல் மீடியாவில் சிலர் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் விஜய் டிவி இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு விட்டது. ஆனாலும் விஜய் சேதுபதியின் குடும்பத்தையும் விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆபாசமாக பேசி வருகிறார்கள்.

சரி.. விஜய் சேதுபதி விஜயை தான் சொன்னார் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? அவரிடமே போய் கேளுங்கள். நீங்க சொன்ன கருத்து தப்பு, இதோ எங்களுடைய பதில் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் பொறுப்பு வந்ததும் அடுத்தவர்கள் மீது பழியை போட்டுவிட்டு ஓடவில்லை என்று ஆதாரத்துடன் நிறுவியுங்கள் அதுதான் அரசியல். அதை விட்டுட்டு இப்போ சோசியல் மீடியாவில் சில விர்ச்சுவல் வாரியர்ஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு பார்த்தாலே சிரிப்பும், அதே நேரத்தில் பயமும் வருகிறது.

Vijay Sethupathi Vijay Bigg Boss

குடும்பத்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

பல வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட சாதாரண குடும்ப போட்டோக்களை எடுத்து அவற்றை மோசமான விதத்தில் சித்தரித்து, ஆபாசமாக கமெண்ட் போடுவது வரை சில சமூக வலைதள பதிவுகள் சென்றிருக்கிறது. விஜய் சேதுபதியின் மனைவியோ குடும்பத்தினரோ யாருமே அரசியல் பேசவில்லை. அப்படி இருக்கும்போது விஜய் சேதுபதியை விமர்சிக்கிறேன் என்று அவருடைய குடும்பத்தையும் மொத்தமாக விமர்சிக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

விஜய் பற்றி விஜய் சேதுபதி பேசினாரா? EVPக்கு வந்தால் என்ன ஆகும்? கொந்தளித்த கூல் சுரேஷ்! மடக்கிய ரசிகர்கள்
சமீபத்தில் தான் சட்டப்பேரவையில் பெண்களை ஆபாசமாக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் விஜய் சொல்லி இருந்தார். ஆனால் இப்போது அவருடைய டிபியை வைத்து சோசியல் மீடியாவில் சிலர் விருச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லிக் கொண்டு விஜய் சேதுபதியின் குடும்பத்தை மோசமாக திட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தலைமையின் மீது பயமோ அல்லது மரியாதையோ கிடையாதா? தலைமை பேச்சைக் கேட்டு இவர்கள் எல்லாம் நடக்கவே மாட்டார்களா?

Vijay Sethupathi Vijay Bigg Boss

பிரேமலதா விஜயகாந்த் கேட்ட கேள்வி

அதுபோல பெண்களை மோசமாக பேசினால் அடுத்தவர்கள் மீது மட்டும்தான் நடவடிக்கை பாயுமா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே இதே கருத்தை சட்டசபையில் பிரேமலதா விஜயகாந்த் வைத்திருந்தார். உங்கள் கட்சியை சார்ந்தவர்களும் பெண்களை மோசமாக விமர்சிக்கிறார்கள், சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசுகிறார்கள் என்று சொன்னபோது, அதற்கு அரசு சார்பில் அப்படி யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.

அப்படியானால் இப்போது விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி மோசமாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடுமா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. விஜய் சேதுபதி பேசியபோது விஜய்யின் பெயரை சொல்லவே இல்லை. அந்த பேச்சு அரசியல் ரீதியாக சிலரால் புரிந்து கொள்ளப்பட்டது மட்டுமே என்று விஜய் டிவியும் விளக்கம் கொடுத்திருக்கிறது. அப்படி இருக்க அவர் எங்களை பற்றி பேசிட்டார் என்று நீங்களாக முடிவு பண்ணிட்டு அதற்கு பதிலாக அவர் மனைவியின் பழைய புகைப்படங்களை எடுத்து அசிங்கப்படுத்துவது எந்த வகையான வாரியர் வேலை?

Vijay Sethupathi Vijay Bigg Boss

அட்வைஸ்

ஒருவர் உங்க தலைவரை விமர்சித்தால் தலைவருக்காக பேசுங்க, ஆனால் அவர் வீட்டு பெண்ணை இழுத்து அவமானப்படுத்திவிட்டு நாங்க தலைவருக்காக என்ன வேணாலும் செய்வோம் என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. தலைவரை காப்பாற்றுகிறேன் என்று கிளம்பி அவருடைய பெயருக்கே கெட்ட பெயர் வாங்கி தந்துராதீங்க. "நீங்க பண்ணுறது வாரியர்ஸ் வேலை இல்லை கீபோர்டு அட்டூழியம்.." என்பதும் பலருடைய அட்வைஸ் ஆக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+