இந்த வாரம் ஓடிடியை தெறிக்க விட போகும் 5 படங்கள்...டாப்பில் ரசிகர்கள் எதிர்பார்த்த படமும் இருக்கே
சென்னை: இந்த வாரம் ஓடிடி யில் வெளியாகும் படங்களின் விவரம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த திரைப்படங்களை காண்பதற்காக தற்போது எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

அன்பறிவு
தற்போது பல திரைப்படங்கள் தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் முன்பே ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இந்த வாரத்தில் 5 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதில் முதலாவதாக அன்பறிவு திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருப்பதால், அவருடைய ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்து வருகின்றனர். அஸ்வின் ராம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியாகியுள்ள அன்பறிவு திரைப்படத்தில் ஆதி இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஷிவானி ராஜசேகர், காஷ்மிரா, நெப்போலியன், சாய்குமார், ஆஷாசரத் ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விதார்த் தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்தப் படம் நேரடியாக 'Disney plus hotstar' OTTஇணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயில்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயில் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் வசந்தபாலன் மற்றும் ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரபாகர், ரோபோ சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமும் இரண்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டும் விதமாக ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதைத்தொடர்ந்து 'Tenkotta'OTT இணையதளத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ளது.

புஷ்பா
அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் புஸ்பா திரைப்படமும் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பஹத் பாசில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர் சுகு குமார் இயக்கத்தில் உருவான தெலுங்கு திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் பாடல்கள் இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் 'Amazon Prime' OTT இணையதளத்தில் இன்று ரிலீசாக உள்ளது.

வருது காவலேனு
லக்ஷ்மி சௌஜன்யா இயக்கத்தில் நகைச்சுவை மற்றும் காதல் கலந்து தெலுங்கு மொழியில் வெளியான படம் வருது காவலேனு எனும் திரைப்படம். இதில் நாக சௌரியா, ரிது வர்மா, முரளி சர்மா, நதியா, ஜெயபிரகாஷ், வெண்ணிலா கிஷோர், பிரவீன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தற்போது 'zee5' OTT இணையதளத்தில் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது.

லக்ஷ்யா
விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான லக்ஷ்யா திரைப்படத்தை தீரேந்திர சந்தோஷ் ஜகர்லமுடி என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நாக சௌரியா, ஜெகபதிபாபு, கெட்டியான சர்மா, சச்சின் கெடும, சத்யா, ரவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது 'Aha' OTT இணையதளத்தில் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications