இசையமைப்பாளர் தேவா வீட்டில் ஏற்பட்ட சோகம்! தள்ளி வைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி! வெளியான அறிக்கை
சென்னை: தமிழ் திரையுலகில் இசையின் ஆளுமைகளாக அன்றும் இன்றும் கோலோச்சுபவர்கள் சிலர். அவர்களில் இசைஞானி இளையராஜா மற்றும் தேனிசைத் தென்றல் தேவா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இளையராஜாவைப் போலவே தேவாவும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு வருகிறார் என்ன நிலையில் தன்னுடைய இசை நிகழ்ச்சி தன் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

ராயல்டி யுத்தம்
இசைஞானி இளையராஜா, யுடியூப் மியூசிக் தளத்தில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமான மாதாந்திர ஆடியன்ஸைப் (40+ கோடி மாதாந்திர ஆடியன்ஸ்) வைத்திருக்கிறார் இத்தனை வருடங்கள் கடந்தும் அவருடைய இசைக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான 'டியூட்' திரைப்படத்தில் தனது பாடலை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில், இளையராஜாவின் தரப்பு சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. நீதிபதி என். செந்தில்குமார், 'டியூட்' திரைப்படம் தொடர்பாகத் தனியாக வழக்கு தொடரலாம் என்று கூறியிருக்கிறார்.
பழைய போராட்டங்கள்
இளையராஜா இதற்கு முன்பு, தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காகச் சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்ட்ஸ், யூனிவர்சல் ரெக்கார்ட்ஸ்* உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளரின் உழைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருக்கிறார்.
தேனிசை தென்றல் தேவா
இளையராஜா தனது உரிமைகளுக்காகச் சட்டப் போராட்டத்தில் ஈடுபடும் அதே நேரத்தில், இன்னொரு இசைக் கலைஞரான தேவாவின் பெருந்தன்மையைப் பற்றி ஒரு ரசிகனாகப் பார்க்கும்போது பலருக்கும் வியப்பு மேலிடுகிறது.
90களின் இறுதியில் வந்த இளைஞர்களை 'தென்னீஸின்' ஆட்டத்திற்குள் கொண்டு வந்தவர் தேவாதான்! அவரது துள்ளலான இசையில் பிறந்த எண்ணற்றப் பாடல்கள் இன்றும் நம்முடைய பிளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கின்றன. காதல், சோகம் என உணர்வுப்பூர்வமானப் பாடல்களையும், கிராமிய மணத்துடன் கூடிய மெலடிகளையும் கொடுத்தவர் இவர்.
பெருந்தன்மை
சினிமாத் துறையில் வெற்றி பெற்று உச்சத்தில் இருக்கும் கலைஞர்கள் பலரும் சில சமயங்களில் சர்ச்சைகளில் சிக்கும்போது, தேவா எப்போதும் அமைதியான, பெருந்தன்மை கொண்டவராகவே அறியப்படுகிறார். பல இளம் இசையமைப்பாளர்களின் வளர்ச்சியைப் பாராட்டியும், தன்னுடைய பாடல்களை அவர்கள் பயன்படுத்தும்போது மகிழ்ச்சியுடனும் அங்கீகரிக்கும் மனப்பான்மை இவரிடம் இருந்துள்ளது.
தேவா கச்சேரி ஒத்திவைப்பு
இந்த நிலையில், தேனிசைத் தென்றல் தேவாவின் கச்சேரி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்த ஒரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அக்டோபர் 26, 2025 அன்று நடைபெற இருந்த தேவாவின் கச்சேரி தவிர்க்க முடியாதக் காரணங்களால், நவம்பர் 29, 2025 அன்று ஒத்திவைக்கப்படுவதாகச் சுருதிலயா மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மேலும் தகவல்களையும் இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மேலும் அந்த பதிவில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தேனிசை தென்றல் தேவா அவர்களது சகோதரர் திரு சபேஷன் அவர்களது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழல் காரணமாக இந்த முடிவினை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தேனிசை தென்றல் தேவா அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கடுமையான சூழலை உள்வாங்கிக் கொண்டு ஸ்ருதிலயா நிறுவனம் அவர்களுக்கான அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும், இசை நிகழ்ச்சி தள்ளி போடப்பட்ட நிலையில் இது தொடர்பான முழுமையான தகவல்களை வெளிப்படுத்த தன்மையோடு அனைவருக்கும் தகவல்களை நிறுவனம் வழங்கும் என்று உறுதி அளித்திருக்கிறது.
இசைக் கலைஞர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க வேண்டிய சூழலில் இருக்கும் நிலையில், தேவாவின் எளிமையும், அவருடைய நீண்டு நிற்கும் இசைப் பயணமும் ஒரு ரசிகனுக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிப்பவை! தேவா தன்னுடைய பாடல்கள் இப்போதுள்ள திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது தனக்கு பெருமை தான் நான் என்னுடைய பாடல்களை பயன்படுத்துவதற்கு யாரிடமும் காப்பிரைட் கேட்க மாட்டேன் என்று பெருந்தன்மையாக பேசி பலருடைய மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவருடைய பாடல்கள் மட்டுமல்லாமல் இவருடைய பெருந்தன்மையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவருடைய குடும்பத்தில் இப்போது இருக்கும் சூழ்நிலை குறித்து பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications