தேவயானி கணவரை கிண்டல் பண்ணுனது தப்பா? அப்போ நடந்தது இதுதான்! முதல் முறை விளக்கம் கொடுத்த சந்தானம்
சென்னை: நடிகர் சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் ராஜகுமாரன் நடித்தது தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகை தேவயானி பேட்டியில் பேசி இருந்தார். இதற்கு நடிகர் சந்தானம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி இப்போது கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து அடிக்கடி சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது. சந்தானம் சமீபத்தில் டிடி நெக்ஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கோவிந்தா கோவிந்தா பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.

சந்தானத்தின திறமை
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் திருப்பதி கோவிலுக்கு தமிழர்கள் யாரும் வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கும்போது நடிகர் சந்தானத்துடன் நடிகை தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரன் நடித்த காட்சி குறித்து நடிகை தேவயானி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். சந்தானம் ஆரம்பத்தில் மன்மதன் திரைப்படத்தில் காமெடி கேரக்டராக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கியிருந்தார்.
தேவயானியின் வருத்தம்
அதிலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் அடி வாங்கும் காமெடி கேரக்டரில் இயக்குனர் ராஜகுமாரன் நடித்திருந்தார். இது பற்றி தேவயானி பேசும் போது, என்னுடைய கணவர் எதுக்காக இப்படி ஒரு கேரக்டரில் நடித்தார் என்று எனக்கு தெரியாது. அந்த படத்தில் நடித்து முடித்தவரைக்கும் அவர் எங்களிடம் சொல்லவில்லை. சந்தானம் அந்த படத்தில் அவரை அடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இருந்தது. இது எங்களுக்கு பிடிக்கவே இல்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

தேவயானிக்கு பதில்
இந்த நிலையில் நடிகர் சந்தானம் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது தேவயானி பேசியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, நடிகர் என்றால் என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். அதுவும் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவரிடம் ஸ்கிரிப்ட் எல்லாம் சொல்லி அவர் அனுமதித்துதான் அந்த காட்சியை நாங்கள் படமாக்கினோம். அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கவில்லை.
சந்தானம் விளக்கம்
காமெடியாக இருந்தாலும் சரி, அது எந்த கேரக்டராக இருந்தாலும் சரி நடிக்க வந்துவிட்டால் அதை எல்லாம் நாம் பார்க்க கூடாது. இப்போ பர்சனலா ஒருத்தரை கிண்டல் செய்கிறோம் என்றால் அதுதான் தப்பு. ராஜகுமாரன் சாரிடம் ஸ்கிரிப்ட் முன்கூட்டியே கொடுத்து படித்து பார்த்துவிட்டு அவர் அந்த கேரக்டராக மாறி நடித்து இருந்தார். அந்த கேரக்டர் படி அவர் முதலில் என்னை கிண்டல் செய்வார் நான் அவரை கிண்டல் செய்வேன் அப்படித்தான் காட்சிகள் இருந்தது. பவர்ஸ்டார் போன்ற ஒரு கேரக்டரில் தான் அந்த படத்தில் ராஜகுமாரன் நடித்திருந்தார் என்று சந்தானம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications