"நீ அடம் பிடித்தால் நான் அடங்கி போவேன்” மருமகள் இனியாவோடு நகுல் பாடிய பாடல்! நடுவர்கள் ரியாக்ஷன், செம சம்பவம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தேவயானியின் மகள் இனியாவுடன் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்த தேவயானியின் தம்பி நகுல் பாடிய பாடல் தான் இணையத்தில் வைரல் ஆக வருகிறது. இனியா மற்றும் நகுல் இருவரும் இணைந்து "என்னை அறிந்தால்" படத்தில் இடம்பெற்ற "உனக்கென்ன வேணும் சொல்லு" பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சாமானியனையும் சாதனையாளனாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதில் திறமையோடு இருக்கும் பலர் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சரிகமப சீனியர் சீசன் 6 போட்டியாளர்
அந்த வரிசையில் நடிகை தேவயானியின் மகளும் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். தேவயானி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருந்தாலும் அவருடைய மகள், "நான் மக்கள் முன்பு என்னுடைய திறமையை காட்டி பிரபலமடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதால்" இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். முதல் வாரத்தில் அவர் பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடல் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து விட்டது.
தேவயானியின் தம்பி நகுல்
இளையராஜாவின் மகளான பவதாரணி பாடிய இந்த பாடலை பவதாரணி போலவே இனிமையான குரலோடு இனியா பாடி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தன்னுடைய குரலால் ரசிகர்களை மட்டுமல்லாமல் நடுவர்களையும் வியக்க வைத்து வருகிறார். இந்த வாரத்தில் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது.
இனியா பாடிய பாடல்
இதில் இனியா செந்தமிழனுடன் சேர்ந்து "காதோரம் லோலாக்கு" என்ற பாடலை பாடியிருந்தார். அந்த பாடல் பலருடைய பாராட்டைப் பெற்றது. அதேபோல இந்த வாரத்தில் சிறப்பு விருந்தினராக தேவயானியின் தம்பி நகுலும் கலந்து கொண்டிருக்கிறார். நகுலுடன் சேர்ந்து கிட்டார் வாசித்தப்படியே "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் இடம் பெற்ற "உனக்கென்ன வேணும் சொல்லு" என்ற பாடலை பாடியிருந்தார்.

தாயாக மாறிய தாய்மாமன்
மாமன் மற்றும் மருமகள் இருவரும் அந்த பாடலை பாடியதே பலர் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர். இந்த பாடலை கேட்டதும் நடுவராக இருக்கும் சைந்தவி இந்த பாடல் குறித்து நெகிழ்ந்து பேசியிருந்தார். அதாவது இந்த பாடல் கேட்கும் போது அவ்வளவு இனிமையாகவும் ஜாலியாகவும் இருக்கிறது. நீங்கள் இருவரும் பாடுவதை பார்க்கும் போது இந்த மேடையிலே மனநிறைவோடு ஒரு மகிழ்ச்சி வருகிறது என்று பாராட்டி இருந்தார்.
காதல் திருமணம்
அதுபோல பாடகர் ஸ்ரீனிவாஸ் உங்கள் இருவருக்கும் இருக்கும் அன்பு அவ்வளவு அழகானது என்று இந்த பாடலில் வெளியாகிறது என்று கூறியிருந்தார். தேவயானி காதல் திருமணம் செய்ததால் ஆரம்பத்தில் தேவயானியின் கணவர் ராஜகுமாரனிடம் பேசாமல் இருந்த நகுல் இப்போது தன்னுடைய மாமன் மற்றும் அக்கா மகள்களுடன் பேசி பழகி வருகிறார். தாய்மாமன் என்பவர் எப்போதுமே தாய்க்கு சமம் என்று இப்போது நகுல் நிரூபித்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். தன்னுடைய மருமகளுடன் பாட்டுப்பாடி அவரை பாராட்டிய நகுல் கடைசியாக அவருக்கு மைக் பரிசு ஒன்றையும் கொடுத்து இருக்கிறார். அதை வாங்கியதும் இனியா சந்தோசத்தில் கண்ணீர் விட்டிருக்கிறார். இந்த எமோஷனலான மூவ்மெண்ட் பார்ப்பவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications