சரிகமபவில் பாடகி மட்டுமல்ல.. இப்போ சினிமாவிலும் கதாநாயகியாகும் தேவயானியின் மகள்.. அதுவும் இந்த படம் தானாம்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகள் இனியா போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இனியாவிற்க்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். இந்த நிலையில் இனியாவிற்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் எந்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனாலையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் போராடிக் கொண்டிருப்பார்கள் ஆனால் இப்போது சினிமாவிற்கு முன்பு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு சினிமா வாய்ப்பு எளிமையாக கிடைத்து வருகிறது.

அதனால் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாவதற்கு தான் பலர் முயற்சி எடுக்கிறார்கள். அந்த வரிசையில் தேவயானியின் மகளும் தனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும் என்று சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே "குயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டார்.
அதற்கு பிறகு ஒவ்வொரு வாரமும் தன்னுடைய குரலுக்கு தகுந்த மாதிரியான பாடல்களை இனியா தேர்ந்தெடுத்து பாடி வருகிறார். இனியா இந்த நிகழ்ச்சியில் பாடியது பலரையும் வியக்க வைத்திருந்தது. இனியாவிற்கு இருக்கும் திறமைக்கு தேவயானி தனக்கு தெரிந்தவர்களிடம் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் ஆனால் தன்னுடைய மகள் அவளுடைய சொந்த திறமையால் முன்னுக்கு வரவேண்டும் என்று தேவயானி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இனியாவை அறிமுகப்படுத்தியதை எல்லோரும் பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில் இப்போது இனியா சினிமாவிலும் கதாநாயகியாக மாறப்போகிறாராம். அது குறித்த தகவல் தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் பிரியதர்ஷினி புலிகொண்டா, சாய்குமார் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் 14ஆம் ஆண்டு கோர்ட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ் உரிமையை இயக்குனர் தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், இதில் தேவயானியின் மகள் இனியாதான் ஹீரோயினியாக அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த வாரத்தில் சரிகமப நிகழ்ச்சியில் டூயட் ரவுண்ட் நடைபெற்றது அதில் இனியாவும் அவருடைய மாமாவான நடிகர் நகுலும் பாடிய உனக்கென வேணும் சொல்லு என்ற பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும்போது பலர் இனியா சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது அவர் விரைவில் கதாநாயகியாக வேண்டும் என்று கூறி வந்தனர். அது இப்போது நடக்க இருக்கிறது. நடிகர் சரத்குமார் நடிகை தேவயானி பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்த 3 பிஹெச்கே (3BHK) திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அம்மா நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது மகளும் கதாநாயகியாக எப்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications