தேவயானிக்கும் காமெடி நடிகர் சிங்கமுத்துவிற்கும் இப்படி ஒரு உறவா..இக்கட்டான சூழ்நிலையில் செய்த உதவி?
சென்னை:தற்பொழுது காமெடி நடிகர் சிங்கமுத்துவிற்கும் தேவயானிக்கும் இருக்கும் உறவை குறித்து தனியார் youtube சேனலுக்கு செய்யாறு பாலு தெரிவித்துள்ள தகவல்கள் கேட்போரை அப்படியா..!! என்று வியக்க வைத்துள்ளது.
திரை உலக பிரபலங்கள் பலர் தங்களுக்குள் ஒரே படங்களில் நடிக்காமல் இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தங்களுக்குள் ஒரு இணைப்பில் தான் இருந்துள்ளனர்.
பல youtube சேனல்கள் வந்ததிலிருந்து திரைப்பட பிரபலங்கள் பலருடைய பின்னணிகள் அதிகமாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.

அப்படிதான் பிரபு, சத்யராஜ் இணைந்து நடித்த 'சிவசக்தி' படத்தில் குட்டை பாவாடையுடன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டத்துடன் தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய தேவயானி ,"தொட்டா சிணுங்கி' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்தார். அதன்மூலம் தனது கேரியரை காதல் கோட்டை ,சூரியவம்சம் போன்ற படம் மூலம் ஜொலிக்க வைத்தார்.
செம பீக்கில் இருந்த தேவயானி அந்த நேரத்தில் அனைவரையும் அதிருச்சிக்குள்ளாக்கும் வகையில் செய்தது அவரது திருமணம் தான்.தற்பொழுது இணைய வாசிகளுக்கு பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன்- மகாலட்சுமி திருமணம் எப்படி அதிர்ச்சியை கிளப்பியதோ..!! அதைவிட 80sகளில் பல மடங்கு வியப்பை கொடுத்தது நடிகை தேவயானி- இயக்குனர் ராஜகுமாரன் திருமணம் தான்.
காதலுக்கு கண் இல்லை என்று பல மொழியை பலர் ஏற்றுக்கொண்ட தருணம் அது என்றே சொல்லலாம். சூரியவம்சம் படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் நடவடிக்கைகள் பிடித்துப் போய் அவரை காதல் செய்ய ஆரம்பித்த தேவயானி, வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கிட்டத்தட்ட சினிமா பாணியிலே அவரை திருமணமும் செய்து கொண்டார்.

நடிகை தேவயானி அம்மாவின் கடும் எதிர்ப்பையும், படை பலத்தையும் மீறி சுவர் ஏரி குதிக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்து திருத்தணியில் வைத்து நடைபெற்ற திருமணம் இயக்குனர் ராஜகுமாரன் நடிகை தேவயானி தம்பதிகள் திருமணம். அப்பொழுது சாட்சி கையெழுத்து போட்டது காமெடி நடிகர் சிங்கமுத்து தானாம். சொல்லப்போனால் இயக்குனர் ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டதே சிங்கமுத்து தானாம்.
இதை தற்பொழுது கேள்விப்பட்ட நெட்டிசன்கள் வெளியே இருந்து பார்ப்பதற்கு சினிமா பிரபலங்கள் தங்களுக்குள் பெரிய அளவில் தொடர்பு இல்லாதது போல் தெரிந்தாலும் குடும்பம் போல் ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் உதவியாகவோ உறவாகவோ இருந்துள்ளார்கள் என்று சிலாகித்து வருகின்றனர்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications