காதல் சர்ச்சை கிளப்பியதும் இன்ஸ்ட்டாவில் மிருணாள் தாகூர் செய்த விஷயம்! அதற்கு தனுஷ் சகோதரிகள் செய்த செயல்!
சென்னை: நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக வெளியான தகவல், தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி, அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் பெரிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் பிரிந்த பிறகு, தனது சினிமா வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ், இப்போது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் நடந்த மாயம்
தனுஷும், மிருணாள் தாகூரும் காதலிப்பதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இன்ஸ்டாகிராமில் நடந்துள்ளது. மிருணாள் தாகூர், தனுஷின் சகோதரிகளான டாக்டர் கார்த்திகா மற்றும் விமல கீதா ஆகியோரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார். பதிலுக்கு, அவர்களும் மிருணாளைப் பின்தொடர்கின்றனர்.
இந்த நிகழ்வு, தனுஷ் தனது குடும்பத்தினரிடம் மிருணாளை ஏற்கனவே அறிமுகம் செய்து வைத்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இதனால், ரசிகர்கள், "குடும்பத்தாரின் ஆசீர்வாதத்துடன் இருவரும் காதலித்து வருகிறார்கள் போன்று," என்று பேசிக் கொள்கிறார்கள்.
மிருணாள் தாகூரின் பயணம்
மிருணாள் தாகூர், தமிழில் டப்பிங் செய்யப்பட்ட 'இனிய இரு மலர்கள்' சீரியல் மூலம், தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். 'சீதா ராமம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மிருணாள் தாகூருக்குத் தமிழ், பாலிவுட், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
"எங்க செல்லம் மிருணாள் தாகூரை யாராச்சும் கோலிவுட்டுக்கு அழைத்து வாங்களேன்," என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டு மருமகளாக தனுஷ் அவரை அழைத்து வரப்போகிறார் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. இது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தனுஷ் - மிருணாள் காதல்
தனுஷ், மிருணாள் ஜோடி, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. "இந்த ஜோடி கூட நல்லா இருக்கு, வாழ்த்துகள் தனுஷ்," என்றும், "மிருணாள் தாகூர் தமிழ்நாட்டு மருமகளாக வருவதை, கனவிலும் நினைக்கவில்லை," என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இருவரும் தங்கள் காதல் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு நெருக்கமானவர்கள், "இருவரும் இப்போது தான் காதலிக்கத் துவங்கியதால், அதை வெளியே சொல்ல விரும்பவில்லை," என்று தெரிவித்திருக்கின்றனர். தனுஷும், மிருணாள் தாகூரும், ஒரே Spotify பிளேலிஸ்ட்டைப் பயன்படுத்துவது, இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது. இந்த காதல், தனுஷின் வாழ்க்கையில் ஒரு புதிய மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம் என கமெண்ட்கள் குவிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications