ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்.. ஷூட்டிங் இல்லாத போது என்ன செய்கிறார்?.. போட்டோ போட்ட செல்வராகவன்!
சென்னை: ஐஸ்வர்யாவுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட தனுஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷுக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
தனுஷை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன காரணம்
இதையடுத்து இவர்கள் பிரிவு குறித்த காரணம் என்ன என சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் இவர்களை சேர்த்து வைக்க நண்பர்கள் சிலர் அண்மையில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் அதில் இருவரும் கலந்து கொண்ட போதிலும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவே இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு
இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா அண்மையில் பயணி மியூசிர் ஆல்பத்தை வெளியிட்டார். இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் அறிவிப்பும் வெளியானது. அதை பாராட்டிய தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என அழைத்திருந்தார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேருவார்கள் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

தோழியே
தனுஷ் அண்மைக்காலமாக ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவரது குலதெய்வம் கோயிலுக்கு செல்வதையும் சிவலிங்கங்களை தரிசிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் இயக்குநரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்
அதில் தனுஷ், செல்வராகவன், அவர்களது தந்தை கஸ்தூரி ராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். அந்த புகைப்படத்தில் செல்வராகவன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது பெற்றோருடன் தனுஷ் என கேப்ஷன் போட்டிருந்தார். ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்கு பிறகு சிவலிங்க தரிசனத்தை அதிகரித்த தனுஷ் தற்போது தனது பெற்றோருடனும் நேரத்தை செலவிடுகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications