கொள்ளை அழகை அள்ளிக் காட்டிய தர்ஷா குப்தா.. குதூகலமாக ஓடிவந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாவாடை தாவணியை பக்குவமாய் இடுப்பு தெரியும்படி எடுத்து சொருகி கலக்கும் தர்ஷாவை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஓடோடி வருகின்றனர்.

சிரிக்கும் சிரிப்பில் மனதை கொள்ளை கொள்ளும் இவருடைய ஏக்கமூட்டும் போட்டோவை பார்த்ததும் பலபேர் தூக்கத்தை தொலைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளித்திரைக்கு போனாலும் இன்ஸ்டாகிராமை விடமாட்டேன் என்று ரசிகர்களை இழுத்து பிடித்து இருக்கும் தர்ஷா குப்தாவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

என்ன....அழகுடா சாமி

என்ன....அழகுடா சாமி

பாவாடை தாவணியில் கிராமத்து பைங்கிலியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவை பார்த்த அவருடைய ரசிகர்களே ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டார்கள். இத்தனை அழகும் எப்படித்தான் இவரால் பொத்தி வைக்க முடிகிறதோ என்று கலங்கி போய் கமெண்டுகளை போட்டிருக்கின்றனர். மாடர்ன் உடையில் வந்தால் தான் கவர்ச்சி என்று யாரு சொன்னா? இப்படி கிராமத்து பைங்கிளியாக பாவாடை தாவணியில் வந்தாலே ரசிகர்கள் கண்கள் வேறு எங்கேயும் செல்லாது என்று நிரூபிக்கும் விதமாக தற்போது தர்ஷா குப்தா கலக்கலான போட்டோ ஷூட்டை வெளியிட்டிருக்கிறார். எவ்வளவு வேலையாக இருந்தாலும் போட்டோஷூட்டில் பிஸியாக இருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களை தவிக்க விடாமல் தரிசனத்தை காட்டி வருகிறார்.

அசத்தும் அழகு

அசத்தும் அழகு

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தது எல்லாமே சமூக வலைத்தளங்கள் தான். தன்னுடைய அழகான நடிப்பை டிக் டாக்கில் பதித்து உலகம் அறிய செய்தவர். டிக் டாக்கினால் பலருடைய வாழ்க்கை மாறியது போல அவருடைய வாழ்க்கையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
அந்த செயலி இல் இருந்த வரைக்கும் இவர் அதில் ராணியாக வலம் வந்துகொண்டிருந்தார். அதிகமாக பாவாடை தாவணியில் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்த இவரை பின் தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் ஆக வலம் வந்தனர். ஆனால் திடீரென்று அந்த செயலி தடை செய்யப்பட்ட பிறகு அப்படியே இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ரசிகர்களை பாலோவர்ஸ்களாக கொண்டு வந்துவிட்டார். இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி பல பேர் பேமஸ் ஆனது போலவே தர்ஷா குப்தாவும் போட்டோ சூட்டினால் பெரும் பிரபலமாகிவிட்டார்.

எட்டிப்பார்க்கும் குட்டி இடுப்பு

எட்டிப்பார்க்கும் குட்டி இடுப்பு

தர்ஷா குப்தா தற்போது சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் பிரகாசிக்க தொடங்கிவிட்டார். ஆனாலும் சமூக வலைத்தளத்தை அவர் விட்டுவிடுவதாக இல்லை. தினமும் இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போஸ்ட் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பார்த்துக்கொண்டு சுற்றிவருகிறது. இவர் போஸ்ட் வந்ததும் அதற்கு போட்டி போட்டுக்கொண்டு கமெண்டுகளை போடுவது அவர்களுடைய வழக்கமாகவே இருந்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் தன்னுடைய ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருப்பார். ஆனால் தற்போது இவர் பிஸியாக இருப்பதால் அவர்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். ஆனால் இன்று ரசிகர்களின் ஏக்கம் நிறைவேறியது. பல ரசிகர்கள் கமெண்ட்டுகளை அனுப்பி கொண்டிருந்தாலும், அதில் ஒரு சில ரசிகர்களின் கமெண்டுக்கு தர்ஷா பதிலளித்திருக்கிறார்.

ஏக்கம் மூட்டுது அந்தப்பார்வை

ஏக்கம் மூட்டுது அந்தப்பார்வை

தர்ஷா குப்தாவின் கமெண்ட்டுகளை பார்த்ததும் ரசிகர்கள் சந்தோஷத்தில் குதிக்கின்றனர். ரொம்ப நாளைக்கு பிறகு இந்த மாதிரி இவர் செய்திருப்பது தான் தற்போது இவருடைய ரசிகர்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இவர் எத்தனையோ போட்டோ சூட்டுக்களை எடுத்திருந்தாலும் தற்போது பாவாடை தாவணியில் தன்னுடைய க்யூட்டான அழகினை எடுப்பாகத் காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்று ஏழு மணிக்கு இன்ஸ்டாகிராமில் லைவில் வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் இவருடைய ரசிகர்கள் செம ஹேப்பிதான். எப்போது அந்த ஏழு மணி வரும் என்றுதான் பலர் டைமை நொடிக்கொருமுறை செக் பண்ணி வருகின்றனர். தர்ஷா குப்தா அடிக்கடி லைவில் பேசிக் கொண்டிருந்தாலும் தற்போது பல நாட்களுக்குப் பிறகு இன்று இவர் லைவில் வருவதால் இவரிடம் என்ன பேசலாம் என்று இவருடைய ரசிகர்கள் இப்பவே யோசிக்கத் தொடங்கி விட்டார்கள். எப்படியோ இந்த மாதிரி போட்டோஸ்கள் தினமும் வந்தால் போதும் அதற்கு மட்டும் தயவு காட்டுங்கள் என்று தான் பல அப்ளிகேஷன் பறந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+