சிம்பு கெடச்சா எப்படி விட முடியும்.. தர்ஷா மனசு எப்படி பொங்குது பாருங்க!
சென்னை : சின்ன வயசு கிரஷ் அவருதான். அவர் கிடைக்கிறதா இருந்தால் அதை எப்படி விட முடியும் என்று சிம்புவின் மீது தனக்கிருக்கும் கிரஷை வெளிப்படையாக சிலாகித்துப் பேசிக் கூறியுள்ளார் தர்ஷா குப்தா.
தர்ஷா மனசுல இப்படி சிம்புவுக்கு ஸ்பெஷல் இடம் கொடுத்து வைத்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர் ரசிகர்கள். இருந்தாலும் உங்களுக்காகவே நாங்க காத்திருக்கோம்.. நீங்க என்னடான்னா சிம்பு கிட்ட போய்ட்டீங்களே என்றும் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர்.
அப்போ இந்த வருஷம் சிம்புவுக்கு கல்யாணம் நடந்து விடுமா!! என்று இன்னொரு பக்கம் சிம்புவின் தீவிர ரசிகர்கள் சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டுக் கொண்டுள்ளனர்.

இப்படி ஷாக் கொடுத்திட்டீங்களே
இன்ஸ்டாகிராமின் செல்லத் தலைவியாக வலம் வரும் தர்ஷா குப்தா தன்னுடைய சின்ன வயது கிரஸ் பற்றி தற்போது பேசி இருப்பது தான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மனதிற்குள் இப்படியெல்லாம் ஆசை இருந்து இருக்கிறதா என்பது தெரியாமல் இருந்த ரசிகர்கள் தற்போது வெளிப்படையாக தர்ஷா பேசியதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். படிக்கும் போதிலிருந்தே இவர் மீது இவ்வளவு காதல் வைத்திருக்கிறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் அது கிரஸ் மட்டும்தான் வேறொன்றுமில்லை என்று அவர் கூறியிருப்பதை கேட்டதும் கொஞ்சம் மன நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

நிஜமாவா சொல்றீங்க??
தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இன்று ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்தான் சிம்புவைப் பற்றி கூறியிருக்கிறார். அதை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடவும் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி விட்டனர். இப்போதுதான் சீரியலிருந்து வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் வெள்ளித்திரையில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று இவரை விடவும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஏனென்றால் அவர் ரசிகர்கள் மீது அந்த அளவிற்கு பாசத்தை வைத்திருப்பதும் ரசிகர்கள் அவர் மீது அன்பை பொழிகின்றனர்.

கமெண்ட்களுக்கு பதில் லைக்
நடிகைகள் பலர் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது போலத்தான் தர்ஷாவும் ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்களை போட ஆரம்பித்து இருந்தார்.அந்த நேரத்தில் இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் போட்டோக்களை எடுத்து குவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். அதற்கு கமெண்டுகளை போடும் ஒவ்வொரு ரசிகருக்கும் பொறுமையாக பதில்களையும் அல்லது லைக்குகளையும் திருப்பிப்போட்டு வருவதுதான் இவருடைய சிறப்பு. என்னதான் பெரிய நடிகையாக இவர் மாறி இருந்தாலும் ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதிலளிக்கும் இவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர்.

பதட்டம் அதிகம் தான்
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் சீரியலை விட்டு விலகி திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராமில் மட்டும் இவர் போஸ்ட் போட மறப்பதில்லை. அவருடைய ரசிகர்களும் இதையேதான் எதிர்பார்க்கின்றனர். எந்த அளவிற்கு வெள்ளித்திரைக்கு சென்று பிரகாசமாக மாறினாலும் இன்ஸ்டாகிராமில் தினமும் போஸ்ட் போட்டு விடுங்கள் என்று தான் இவருக்கு அன்பு கட்டளை இட்டு வருகின்றனர்.

அவருக்கு ஓகேன்னா தர்ஷாவுக்கும் ஓகேதான்...
ரசிகர்களின் வேண்டுகோளுக்காக இவரும் தினமும் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தாலும் தற்போது இவர் போட்ட போஸ்ட் தான் செம வைரலாக பரவி வருகிறது. அதில் சிம்புவுக்கு ஓகேனா. ..எனக்கு டபுள் ஓகே என சிம்பு மீது இவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிகாட்டி இருக்கிறார். இவர் காலேஜ் படிக்கும் போது சிம்பு மீது பெரிய அளவில் கிரஷ் ஆக இருந்து இருக்கிறாராம். காலேஜ் நோட்புக்கில் சிம்புவின் போட்டோஸ்கள் இருந்தால்கூட அது என்னுடைய ஆள் என்று கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்டிருந்த எபிசோடுகளில் சிம்புவை தவிர வேறு யாரையுமே பார்க்கவே இல்லையாம். ஆனாலும் குழந்தைப் பருவத்தில் இருந்ததற்கும் தற்போது காதல் வேறு என்பதை புரிந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த போஸ்ட் பார்த்து பல ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டுகின்றனர்.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications