Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலையில் ஜம்முன்னு இருக்காங்க.. மாடர்ன் டிரஸ்ஸில் ஜில்லுன்னு இருக்காங்க.. தர்ஷனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: போட்டோ ஷூட் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து எல்லா நடிகைகளும் ஆட்டி வைத்து வருவது போல நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருக்கும் தர்ஷனா அசோகனையும் விட்டு வைக்கவில்லை.

தர்ஷனா விதவிதமான ஆடைகளில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் விதவிதமாக போட்டோ ஷூட்ல கலக்கி இருக்கிறார்.

எப்பவுமே தனது ஆசையும் தனது கனவும் தான் முக்கியம் என்று மட்டும் கருதாமல் பெற்றோரின் ஆசைக்காகவும் இவர் டாக்டருக்கு படித்து விட்டு அதற்காக தன்னுடைய கனவை மண்ணுக்குள் போட்டு புதைத்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம்.

 ரொம்ப ஆசை

ரொம்ப ஆசை

சிறுவயதிலிருந்தே நடிப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்த தர்ஷனா அதற்கான அடித்தளமான போட்டோ சூட்டிலும் மாடலிங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய ஆசை கனவு எல்லாமே சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இவர் வீட்டில் அதுக்கு துளிகூட விருப்பம் இல்லையாம். அதனால்தான் இவர் காலேஜ் முடிகிற வரைக்கும் பொறுமையாக இருந்திருக்கிறார்.

 அப்பாவுக்குப் பிடிக்கலை

அப்பாவுக்குப் பிடிக்கலை

தர்ஷனா அசோகன் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளி கல்லூரியை முடித்திருக்கிறார். இவருடைய தந்தை ஒரு மருத்துவர் அந்த வழியில் இவரையும் மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்ற அவரது ஆசையை இவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் தர்ஷனாவுக்கு சினிமாக்களில் கலக்க வேண்டும் என்று ஆசை .முதலில் தனது ஆசையை அப்பாவிடம் கூறியிருக்கிறார் .ஆனால் அதற்கு அப்பா துளிகூட சம்மதிக்கவில்லை,

 டாக்டர் தர்ஷனா

டாக்டர் தர்ஷனா

தர்ஷனாவும் வேறு வழியின்றி தன்னுடைய தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்திருக்கிறார் .அதுவும் பல் மருத்துவர். அதன் பிறகு இவருடைய தந்தை ஒரு கிளினிக் வைத்து கொடுத்திருக்கிறார். ஆனால் காலேஜ் முடிக்கிற வரைக்கும் பொறுமையாக இருந்த இவர் முடித்த பிறகு தன்னுடைய ஆசையான மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் . தற்போது மாடலிங்கிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வருகிறாராம்.

 மாடலிங்கில் புகுந்தார்

மாடலிங்கில் புகுந்தார்

மாடலிங்கில் கலக்கி கொண்டிருக்கும் போதுதான் அதிலிருந்து இவருக்கு நீதானே என் பொன்வசந்தம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இவர் அனுவாகவே குடிகொண்டு விட்டார் . இந்த சீரியல் 40 வயது ஆணிற்கும் இருபது வயது பெண்ணிற்கும் உண்டாகும் காதலைப் பற்றியது. ஏற்கனவே பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் அந்த மொழிகளில் இதன் வெற்றியை தொடர்ந்து தான் தமிழிலும் இதை எடுத்திருக்கிறார்கள்.

பொன்வசந்தம்

பொன்வசந்தம்

தமிழிலும் இது எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றிருக்கிறது .அதிலும் இந்த சீரியலில் இவர் ஒரு எளிமையான குடும்பத்தின் பெண்ணாக கச்சிதமாக பொருந்துகிறார். தன்னுடைய காதலை தான் காதலிக்கும் சூரியபிரகாஷிடம் மறைமுகமாக கூறி அவர் அந்த காதலை இன்னுமும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில் இவருடைய தவிப்புகளை ரசிகர்களுக்கு நன்றாகவே பிடித்திருக்கிறதாம். தினமும் இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் கூடிக்கொண்டே வருகிறது. அதற்கு முழுமையான காரணம் இவரும் ஒருவர்.

 வசீகர அழகி

வசீகர அழகி

பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .அது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். இவருடைய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து பலர் ரசிகர்களும் வழிகின்றார்கள், சேலைகளிலும் சரி மாடர்ன் உடைகளிலும் சரி கச்சிதமாக இவருக்கு பொருந்துகிற அளவிற்கு உடைகளை தேர்வுசெய்து புகைப்படங்களை எடுத்து குவித்து வருகிறார்.

 செம ஜாலி டைப்

செம ஜாலி டைப்

அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செம ஜாலியாக கொண்டாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்களும் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். சிலருக்கு சேலை சரியாக மேட்ச் ஆகும், சிலருக்கு மாடர்ன் உடை பொருத்தமாக இருக்கும் ஆனால் இரண்டிலுமே இவர் வேற லெவல் என்று இவருடைய ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள் .

 ரசிகர்கள் ஹேப்பிதான்

ரசிகர்கள் ஹேப்பிதான்

தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் வைரலாக இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது .3 மாடர்ன் உடையில் எடுத்த போட்டோக்களை ஒரே பிரேமில் எடிட் பண்ணி கலக்கலாக வெளியிட்டிருக்கிறார் .வேற லெவலில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் .அதிலும் தற்போது கிளாமரை கொஞ்சம் தூவி விட்டிருக்கிறார் .பலர் இந்த போட்டோக்களை பார்த்து எங்கலுக்கு தூக்கம் போச்சே என்று புலம்புகிறார்களாம்.. ஜாலியாக!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+